லகம் முழுவதும் பாட்டாளி வர்க்கத்தில் மகத்தான தலைவர் தோழர் லெனினில் 152-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்நிகழ்ச்சிகளின் செய்தி மற்றும் புகைப்படங்களை இங்கே பதிவிடுகிறோம்.
000
பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் தோழர் லெனின் பிறந்தநாள் மதுரையில் அரங்கக் கூட்டம்!
கூட்டத்தில் புமாஇமு தோழர் சேகரன் தலைமை தாங்கினார் அவர் பேசும்போது இன்றைக்கு மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள், உழைப்பு  ஆகியவற்றை கைப்பற்றிக் கொள்ள ஏகாதிபத்தியங்கள் போடும் போட்டியையும், நமது நாட்டில் விவசாயம் எப்படி அளிக்கப்படுகிறது? தொழிலாளர்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் எப்படி ஒட்ட சுரண்டப்படுகிறார்கள்? மக்கள் வாழ முடியாத சூழலை நோக்கி தள்ளப்படுகின்றனர். இதே நிலைமைதான் இலங்கையில் தனியார்மயம் – தாராளமயம் –  உலகமயம் போன்ற கொள்கைகளால் நாடு விற்கப்பட்டு மக்கள் உணவில்லாமல்; எரிபொருள் கிடைக்காமல்; வேலையில்லாமல் நடுத் தெருவில் நிற்கின்றனர். இதற்கு அமெரிக்க – சீன மேலாதிக்கப் போட்டிதான் காரணம் என்பதை விளக்கி இதை நாம் முறியடிக்க மக்கள் படை உருவாக்க வேண்டும் என பேசி முடித்தார்.
அடுத்ததாக, தோழர் ரம்யா அவர்கள், லெனினின் வரலாற்றை பல்வேறு தரவுகளுடன் அதாவது ஆரம்பத்தில் லெனினுடைய குடும்பம் அதன் பின்னால் அவர்கள் வளர்ந்த விதம், அவர் மூலதனம் படிப்பதற்கான சூழல், தன் அண்ணனிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள், இளம் வயதில் பல்கலைக் கழக போராட்டங்களில் பங்கெடுத்தது, வழக்கறிஞர் தொழில், அதன் பின்பு புரட்சிப் பணிகள், மக்களை ஒன்றுபடுத்தியது போன்ற விஷயங்களை புதிய தரவுகளுடன் முன்வைத்தார். உணர்வுபூர்வமாக தனது கருத்தை முன்வைத்தார்.
அடுத்ததாக, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் அவர்கள் பேசும்போது, இவ்வளவு ஆண்டுகளாக மக்களை திரட்ட முடியவில்லை என்பது குற்ற உணர்வாக இருக்கிறது. லெனின் எப்படி மக்களை புரட்சிக்கு அணி திரட்டினார் என்பதை நாம்  அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மக்களை நேசித்தார்; தோழர்களை நேசித்தார். ஒரு கட்சி எப்படி கட்டப்பட வேண்டும் அதில் உள்ள உறுப்பினர்கள் என்னென்ன செய்ய வேண்டும்  என்பதை வரையறுத்தார். தோழர் லெனின் தன்னைப் போல பல தோழர்களை உருவாக்கினார். அதனால் நாம் பார்வையாளர்களாக இருக்கக் கூடாது பங்கேற்பாளர்களாக மாற வேண்டும். கட்டுக்கோப்புடன் நமது திறமைகளை புரட்சிக்காக வளர்த்துக் கொள்வது என மக்களுக்கு பயனுள்ளவர்களாக நாம் மாற வேண்டும் என்பதை அழுத்தமாகப் பேசினார்.
தோழர் பிரபு பேசும்போது, லெனினிடம் பாட்டாளி வர்க்க விடுதலையை சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சியவெறி இருந்தது. ஆரம்பத்தில் லெனினுடைய அப்பா நாட்டு சூழலைப் பற்றி கூறிய விஷயங்கள் தனது அண்ணன் நரோத்னிக்காக இருந்தது, அவரை தூக்கில் போடும்போது கூட அந்த செய்தி கேட்ட லெனினுடைய அம்மா தனது மகன் சரியான விஷயத்திற்காகதான் நின்றான் என்பதை பகிரங்கமாக கூறுவது போன்ற விஷயங்கள்தான் லெனினை உறுதியுடன் வளர்வதற்கு முக்கியமாக பங்காற்றின.
எப்படி எளிமையாக வாழ்ந்தார் மக்களுக்கு இருந்த அதே அபாயம் லெனினுக்கும் இருந்தது. எப்படி 16 முதல் 18 மணி நேரங்கள் வரை மக்களுக்காக உழைத்தார். குடும்பத்தை எப்படி பார்க்க வேண்டும் கட்சியை எப்படி பார்க்க வேண்டும் என்பதையெல்லாம் லெனின் இடமிருந்து கற்க வேண்டும். அதில்  முக்கியமாக கட்டுப்பாடு  என்ற விஷயத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலமே காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த முடியும். போன்ற விஷயங்களை எளிமையாக தோழர்கள் முன்பு எடுத்து வைத்தார்.
அடுத்ததாக தோழர் ராம் பேசும்போது, ரஷ்யாவில் ஒரு சாதாரண சமையற்கார அம்மா  நாட்டினுடைய பல்வேறு விஷயங்களையும் வரலாற்றையும் தெரிந்து வைத்திருந்தார். அதைப்போல நாம் ஒவ்வொருவரும் வரலாற்றை ஆழமாக தெரிந்து கொள்ள படிக்க வேண்டும் என்பது பற்றி பொதுவுடைமை கல்வி முறை லெனின் இளைஞர்களுக்கு அறிவுறுத்திய விஷயங்கள் குறித்துப் பேசினார்.
இறுதியாக பேசிய மக்கள் அதிகாரம் தோழர் சிவகாமு அவர்கள்,  முதலாளித்துவம் எப்படி அழுகி நாறுகிறது போராட்டம் எப்படி தவிர்க்க முடியாதது, பாசிசம் என்பது என்ன என்பதை எளிமையாக விளக்கினார். இன்று வரை விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது ஒருபுறம் சட்டத்தை வாபஸ் வாங்கிக்கொண்டு இப்போது ஆய்வு என்கிற பெயரில்  80 சதவீத விவசாயிகள் நாட்டில் மூன்று வேளாண் சட்டங்களையும் ஏற்றுக்கொண்டதாக பொய்யைப் பரப்பி அதன்மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு விவசாயத்தை ஒப்படைக்க தீவிரமாக வேலை செய்கிறார்கள். மேலும் காவிக் கும்பல் எப்படி அரசு அலுவலகங்களில் ஆர்.எஸ்.எஸ் – பாஜக ஆதரவாளர்களை நிரப்புகிறார்கள். எப்படி காவி – கார்ப்பரேட் பாசிசமும், நம்மை அச்சுறுத்துகிறது இதை வீழ்த்த நாம் ஒன்று சேர வேண்டும் என்பதை விரிவாக எளிமையான உதாரணங்களுடன் மக்கள் மொழியில் எடுத்து வைத்தார்.
இறுதியாக கேள்வி பதில் விவாதம் நடந்தது அதில் பல்வேறு தோழர்களும் ஊக்கமாக பங்கெடுத்தனர். பலரும் விரிவாக பேசினர்.
இறுதியாக நன்றியுரையுடன் கூட்டம் முடிந்தது.
தகவல் :
புமாஇமு, தமிழ்நாடு.
000
ஏப்ரல் – 22 பாட்டாளி வர்க்க பேராசான் தோழர் லெனின் அவர்களின் 152-வது பிறந்தநாளில் மார்க்சிய – லெனினிய கொள்கைகளை உயர்த்தி பிடிக்கும் வகையில் நாடு முழுக்க அவரது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக,
அமெரிக்க மேலாதிக்க போர் வெறியை முறியடிப்போம் ! இந்தியாவில் காவி- கார்ப்பரேட்  பாசிசத்தை முறியடிப்போம் !  என்ற தலைப்பின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தோழர் லெனின் அவர்களின்   பிறந்தநாள் நிகழ்ச்சி கூட்டங்கள் நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக டி.ஐ. மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட ஆலை வாயில் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார். முதல் நிகழ்ச்சியாக  சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் பா. விஜயகுமார் அவர்கள் சங்க  கொடியேற்றினார்.
கூட்டத்தின் தலைவர் தோழர் சரவணன் அவர்கள் தனது தலைமையுரையில் லெனின் இன்றைக்கும் நமக்கு ஏன் தேவைப்படுகிறார். குறிப்பாக இன்று நாடு முழுவதும் அரங்கேறி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பதற்கு தோழர் லெனின் வழியில் நாம் பயணிப்பது மிகவும் அவசியம் என்ற அடிப்படையில் தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.
அதன் பிறகு சங்கத்தின் சிறப்புத் தலைவரும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி முன்னாள் மாநிலப் பொருளாளருமான தோழர் பா. விஜயகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது சிறப்புரையில் ஒடுக்கப்படும் நாடு, ஒடுக்கப்படும் தேசம், ஒடுக்கப்படும் வர்க்கம் இப்படி யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களெல்லாம் லெனினை உயர்த்திப் பிடிப்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம். சுரண்டும் வர்க்கம் – சுரண்டப்படும் வர்க்கம் என்ற வர்க்க வேறுபாடுகளை உடைத்தெறிந்து ஒரு பொதுவுடைமை சமுதாயம் படைப்பதற்கு, குறிப்பாக இந்தியாவில்  காவி – கார்ப்பரேட் பாசிசம் அரங்கேறி வருகின்ற சூழலை முறியடிப்பதற்கும், கார்ப்பரேட்டின் தீவிரமான சுரண்டலை ஒழித்து கட்டுவதற்கும் இன்று நமக்கெல்லாம் லெனின் ஒரு வழிகாட்டியாக விடிவெள்ளியாக இருக்கிறார். ஆகவே தொழிலாளர்கள் சாதிமத வேறுபாடுகளை கடந்து வர்க்கமாக ஒன்றினைந்து தோழர் லெனின் அவர்களை உயர்த்திப் பிடித்து தமக்கான விடுதலையே சாதிப்போம் என்று தனது  சிறப்புரையை நிறைவு செய்தார்.
இறுதியாக சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் தனசேகரன் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
கூட்டத்தில் தொழிலாளர்கள் பெருவாரியாக கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
தகவல் :
டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கம்.
இணைப்பு- புதிய ஜனநாயக முன்னணி. (மாநில ஒருங்கிணைப்பு குழு) தமிழ்நாடு.
000
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 152-வது பிறந்த நாளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தலைமையேற்று இயங்கிவரும் தொழிலாளர் ஒருங்கிணைப்பு அணி  சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணலி SRF ஆலையில் ஆசான் லெனின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
தகவல்:
தொழிலாளர் ஒருங்கிணைப்பு அணி – SRF மணலி
000
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 152-வது பிறந்தநாளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டத்தில் இயங்கிவரும் ஆக்சில் இந்தியா கிளையில் ஆசான் லெனின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
தகவல்:
ஆக்சில் இந்தியா கிளை, காஞ்சிபுரம்.
000
பாட்டாளி வர்க்க பேராசான் தோழர் லெனின் 153-வது பிறந்த நாள் விழா புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வேலூர் மாவட்ட பகுதியின் சார்பாக அடுக்கம்பாறை தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தில் விழா முன்னெடுக்கப்பட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் திரளான தோழர்கள் கலந்துகொண்டனர்.
தகவல் :
புஜதொமு, மாநில ஒருங்கிணைப்புக்குழு.
000
பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் தோழர் லெனின்,    அவர்களின் 152-வது பிறந்தநாளையொட்டி திருவாரூர்,  புதிய ரயில்வே நிலையம் எதிரில், மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக  22/4 2022, அன்று மாலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவில் தீவிரமாகி வருகின்ற காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க அணிதிரள்வோம் ! என்றும் இன்றைய சூழலை விளக்கியும், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டச் செயலாளர், தோழர் தங்க. சண்முகசுந்தரம் திருவாரூர் நகர மன்ற உறுப்பினர் தோழர் ஜி. வரதராஜன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் சீனி செல்வம், டாக்டர் ரகுநாதன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் ஆசாத், BSP கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் தோழர் M. பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம் தஞ்சை மண்டலம், திருவாரூர் – 6374741279
000
ஏப்ரல்-22 பாட்டாளி வர்க்க ஆசான் தோழர்.லெனின் அவர்களின் 152-வது பிறந்த நாளில் சூளுரைப்போம்! காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம்! என்ற தலைப்பின்கீழ் 22.4.2022 அன்று கோவை மக்கள் அதிகாரம் சார்பில் அறைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு தோழர் ராஜன் கோவை மாவட்ட செயலாளர், தோழர் லூயிஸ் வழக்கறிஞர், போல்ஷிவிக் இந்திய IMT அமைப்பாளர் தோழர் கார்த்திக், உறுப்பினர் தோழர் சங்கர் ஆகியோர் உரையாற்றினர்கள். மக்கள் அதிகாரத்தின் பகுதி தோழர் கலந்து கொண்டனர். இறுதியாக இனிப்பு வழங்கப்பட்டது.
தகவல் :
மக்கள் அதிகாரம், கோவை. 9488902202
000
ஏப்ரல்-22 பாட்டாளி வர்க்க ஆசான் தோழர்.லெனின் அவர்களின் 152-வது பிறந்த நாளில் சூளுரைப்போம்! காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம் ! என்ற தலைப்பின்கீழ் 22.4.2022 அன்று தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அறைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு தோழர் சிவா வட்டார இணைச் செயலாளர் மக்கள் அதிகாரம் அவர்கள் தலைமை தாங்கினார்.
சிறப்புரையாக, தோழர் அருண் வட்டார செயலாளர் மக்கள் அதிகாரம், தோழர் கோபிநாத் மண்டலச் செயலாளர் மக்கள் அதிகாரம் தர்மபுரி மண்டலம் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக, நன்றியுரை வட்டாரப் பொருளாளர் தோழர் சத்தியநாதன் நிகழ்த்தினார்.
தகவல் :
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம். 9790138614
000
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 152-வது பிறந்த நாளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) சார்பாக திருச்சி மண்டலத்தில் ஆசான் லெனின் பிறந்தநாள் நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு குடும்ப விழாவாக நடைபெற்றது. இனிப்புகள்  வழங்கியும் , கவிதை போட்டி , வினாடி வினா, ஒவியப்போட்டி , பாட்டு போட்டி, மேஜீக் நடத்தியும் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு பொருள்களும் வழங்கப்பட்டது.லெனின் பற்றிய ஆவணப் படமும் திரையிடபட்டது இரவு  உணவு வழங்கப்பட்டு முடிவுற்றது.
தகவல் :
புஜதொமு, மாநில ஒருங்கிணைப்புக்குழு.
000
ஆசான் லெனின் அவர்களின் 152-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சேத்துப்பட்டு கிளையில் மக்கள் அதிகாரம், பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, ம.க.இ.க சார்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. ரசிய புரட்சி உழைக்கும் மக்களுக்கு என்ன சாதித்து கொடுத்தது. இலவச கல்வி, மருத்துவம் என மக்களின் நலனில் அக்கறை கொண்ட கட்சியாக போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. நாமும் நம் நாட்டில் ஒரு புரட்சியை சாதிக்க வேண்டும். நம் நாட்டில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என தோழர்கள் உரையாற்றினர்.
தகவல் :
மக்கள் அதிகாரம், சென்னை மண்டலம். 9176801656.
000
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 152-வது பிறந்தநாள் விழா கடலூர் மக்கள் அதிகார அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தோழர் தீனதயாளன் தலைமை தாங்கி  புரட்சியாளர்  மாமேதை லெனின் புகழ் ஒங்குக என்று முழக்கமிட்டு கூட்டத்தை தொடங்கி வைத்தார். தோழர் ராமலிங்கம் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் உருவாக்கிய பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தை ஆய்வுக்குட்படுத்தி நவம்பர் 7 பாட்டாளி வர்க்க ஆட்சி நிறுவினார். அதன்பிறகு உலகம் முழுவதும் பாட்டாளி வர்க்க ஈர்ப்பினால் சோவியத் யூனியனை உருவாக்கினார். பல ஆண்டுகளாக போர் முனையிலிருந்த ரஷ்யா, பொருளாதாரத்தில் பின் தங்கிய ரஷ்யா, உலகத்திற்கே முன்மாதிரியாக திகழ்ந்தது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சி மூலமாக  எல்லோருக்கும் அடிப்படை வசதிகளை உருவாக்கித் தந்தவர் லெனின். அதில் சிறு குறிப்பாக நினைவு படுத்துகிறேன். போரில் சிறை பிடிக்கப்பட்ட சிறைவாசிகளை நேரடியாக சந்தித்தபோது நீங்கள் அனைவரும் சாப்பிட்டீங்களா என்று கேட்டபோது, 75 கைது செய்யப்பட்ட போர் வீரர்கள் – நாங்கள் இன்னும் சாப்பிடவில்லை – என்று கூறினர். சிறை அதிகாரியை லெனின் கேட்டபோது உணவு ஏற்பாடு செய்வதற்கு பொருள் இல்லை என்று கூறியவுடன் அனைவரையும் விடுதலை செய்யுங்கள் என உத்தரவிட்டார் லெனின். மேலும், பாட்டாளி வர்கக சர்வாதிகாரம் என்றால் என்ன? முதலாளி வர்க்க சர்வாதிகாரம் என்றால் எனன? என்று தோழர்களுக்கு  விளக்கினார்.
தோழர் கார்த்திகேயன், அலெக்சான்ட்ரா கொலந்தாய் லெனினை பற்றி கூறும் அவர்  ஒரு சிந்தனையாளர், உழைக்கும் மக்களுக்காக பாடுபட்டவர்.. பிறமொழி படைப்புகளை மொழிபெயர்த்தார். எழுதினார் எழுதிக் கொண்டே இருந்தார். எழுதும் போதும், படிக்கும் போதும் தூக்கம் வந்தால் எழுந்து சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வார். தூக்கம் கலைந்ததும் மீண்டும் படிப்பார். இறுதி மூச்சு  வரை பாட்டாளி வர்க்கத்துக்காக உழைத்தவர் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கட்டிடத் தொழிலாளர்கள், பொது மக்கள் என 25 பேர் கலந்து கொண்டனர். வீடு வீடாக  இனிப்புகள், வழங்கி லெனின் பிறந்தநாள்  கொண்டாடப்பட்டது.
உழைக்கும் வர்க்கத்தின் வாரிசுகளாகிய நாம் மார்க்சிய ஆசான் லெனின் வழியை பின்பற்றுவோம். பாட்டாளி வர்க்கத் தலைமையின்கீழ் அணி திரள்வோம் மார்க்சிய -லெனினிய – மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்! நம் நாட்டிலும் ஒரு புரட்சியை நடத்தி முடிப்போம். சமூக மாற்றத்தை நிகழ்த்தி காட்டுவோம்! என்று அனைவரும் லெனின் பிறந்தநாளில் உறுதியேற்போம்.
இறுதியாக முழக்கமிட்டு நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது.
தகவல் :
மக்கள் அதிகாரம், கடலூர்.
000
விருத்தாசலம் மக்கள் அதிகாரம் சார்பாக ஏப்ரல் 22 தோழர் லெனின் பிறந்தநாளில் பொதுமக்களிடையே முழக்கமிட்டு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி வட்டாரச் செயலாளர் அசோக் குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது.
தகவல் :
மக்கள் அதிகாரம், விருதை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க