பள்ளிகளில் மூன்று மொழிக்கான சுற்றறிக்கை ! புதிய கல்விக்கொள்கையை திணிக்காதே ! | புமாஇமு
மூன்றாவதாக optional language என்ற ஒரு விஷயத்தையும் இணைத்துள்ளார்கள். இது எதைக் காட்டுகிறது என்றால் மூன்றாவது ஒரு மொழியையும் தேர்வு செய்யலாம் படிக்கலாம் என்பதுதான்.
பள்ளிகளில் மூன்று மொழிக்கான சுற்றறிக்கை !
புதிய கல்விக்கொள்கையை திணிக்காதே !
பத்திரிகை செய்தி
6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு ஒரு சில நாட்களுக்குப் பிறகு ஆரம்பிக்க போகிறது தமிழக பள்ளி கல்வித்துறை.
இதற்காக பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக வந்துள்ள சுற்றறிக்கையில் language, english, optional language போன்ற விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. english என்பது குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் தமிழ் என்பது எங்கே?
Language என்பதுதான் தமிழ் என்று குறிப்பிடுகிறார்களா? தமிழ் என்பதை குறிப்பிடாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? இல்ல இது மத்திய அரசும் வழிகாட்டுதல் படி நடக்கிறார்களா என்ற சந்தேகத்தை கல்வியாளர்கள் பலரும் எழுப்பி வருகின்றனர்.
இன்னொருபுறம் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் நடைமுறையில் உள்ளது. ஆனால் இதில் மூன்றாவதாக optional language என்ற ஒரு விஷயத்தையும் இணைத்துள்ளார்கள். இது எதைக் காட்டுகிறது என்றால் மூன்றாவது ஒரு மொழியையும் தேர்வு செய்யலாம் படிக்கலாம் என்பதுதான்.
மூன்றாவதாக ஒரு மொழியை தேர்வு செய்து படிக்கலாம் என்பது முடிவாகிவிட்டாள் இருமொழிக் கொள்கை என பேசுவது ஏமாற்று தான்.
கொஞ்ச நாளாகவே முதலமைச்சரும் கல்வித் துறை அமைச்சரும் பேசி வருவதெல்லாம் புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக்கொண்டு மாநிலத்துக்கு என்று ஒரு கல்விக் கொள்கை வகுப்போம் என்பதுதான்.
அதாவது காவிகளுக்காகவும் கார்ப்பரேடுகளுக்காகவும் வடிவமைக்கப்படும் புதிய கல்விக் கொள்கையில்(நரகலில்) நல்லரிசி தேடுவோம் என்கிறார்கள்.
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம் விடமாட்டோம் என பேசிய திமுக இப்போது புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல விஷயங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
இதை தமிழக மக்களுக்கு திமுக செய்யும் துரோகம் என்று அழைக்காமல் வேற என்ன வார்த்தைகளில் அழைப்பது. காவிகளும் கார்ப்பரேட்டுகளும் தீர்மானிப்பது தான் சட்ட திட்டம் எல்லாம், என்றாகிவிட்ட போது இந்தத் தேர்தல் கட்சிகளை நம்பி என்ன ஆகப்போகிறது.
திராவிட மாடல் உட்பட எல்லாம் மாடல்களும் காவி – கார்ப்பரேட் மாடலுக்கு உட்பட்டது தான் என்பதை எதார்த்த உண்மை எடுத்துக் காட்டுகிறது. காவி – கார்ப்பரேட் பாசிசத்தை களப்போராட்டங்களின் மூலமே முறியடிக்க முடியும் என்பதுதான் எதார்த்தம்.
தமிழக அரசே ! ♦ தமிழை புறக்கணித்து முன்று மொழி திணிக்கும் சுற்றறிக்கையை திரும்பி பெறு!
♦ புதிய கல்விக்கொள்கையை திணிக்காதே!
இவண், தோழர் ரவி, மாநில ஒருங்கிணைப்புக் குழு, புமாஇமு, தமிழ்நாடு.