தமிழகத்தில் இரட்டை ஆட்சி : அண்ணாமலையை காப்பாற்றும் தமிழக அரசு | தோழர் மருது | வீடியோ

பறையன் என்று சாதி இழியை கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டன செய்யும் விதமாக நெட் பிக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது அவர்களின் நேர்காணல் வீடியோ.

மிழகத்தை இன்னும் ஒரு குஜராத் மாற்றியே தீருவோம் என்ற திமிர் பிடித்த ஆணவம் பிடித்த ஒரு நபரின்(அண்ணாமலையின்) கருத்து அது; போலீசில் புகார் கொடுப்பதெல்லாம் விட செருப்பால்தான் அடிக்க வேண்டும். ஒரு பத்திரிகையாளர் என்ன சார் இப்படி சாதியை இழிவாக பேசியுள்ளீர்களே என்று அண்ணாமலையை கேட்டதற்கு ஆங்கில அகராதியை புரட்டிபாருங்கள் என்று திமிராக பதிலளித்திருக்கிறார்.
ஒருவரை பார்த்து தமிழில் நாயே என்று திட்டினால், அது தமிழில்தான் நாய் ஆப்பிரிகாவில் நாய் என்றால் அர்த்தமே வேற என்று சொல்லி பேச முடியுமா? அந்த யுத்தியைத்தான் அண்ணாமலை கையாள்கிறார். இதுவே ஒரு பார்ப்பன சாதியை சார்ந்த ஒரு நபரை இப்படி பேசியிருந்தால் விசயம் வேறவாக இருந்திருக்கும்.
இஸ்லாமியர்களையும், தாழ்த்தப்பட்டிவர்களையும் கொன்றொழிக்கின்ற அந்த விஷ்வ குரு என்பதுதான் கேவலம். இந்த கேவலம் அநியாயத்தை பார்த்துக்கொண்டு தமிழகம் ஏன் அமைதியாக இருக்கிறது?. அண்ணாமலை மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தமிழக மக்கள் செருப்பையும் துடைப்பத்தையும் வைத்துக்கொண்டுதான் வரவேற்க வேண்டும்.
மோடி ஊரெல்லாம் சுற்ற முடியும், ஆனால் தமிழ்நாட்டிற்கு வந்தால் மூத்திர சந்து வழியாகத்தால் ஐஐடி-க்கு செல்லமுடியும் என்ற நிலையை உருவாக்கிய தமிழ்நாடு, இன்றைக்கும் இழிவான விஷயத்திற்கு ஒரு சுடுகாட்டு அமைதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பறையன் என்று சாதி இழியை கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டன செய்யும் விதமாக நெட் பிக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது அவர்களின் நேர்காணல் வீடியோ.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

1 மறுமொழி

 1. திமுகவை ஒழித்துக்கட்டாமல் புரட்சியை முன்னெடுப்பது சாத்தியமில்லை போலிருக்கிறது..! பாசிச பாஜகவைக் கூட அதன் தன்மை அப்படித்தான் என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த திமுகவின் கயமைத்தனத்தைக் கண்டு வெகுளாமல் இருக்க முடியவில்லை..! கோவிலில் பிச்சை எடுக்கும் ஒரு பெண்மணி சொன்னாளாம் “என்னிக்கும் போடாத மகராசி இன்னிக்கும் போடலை.. தினம் போடுற மூதேவி உனக்கென்ன வந்திச்சு இன்னிக்கு..” என்று..
  நெறியாளர் கேட்கிறார் ” ஸ்டாலின் GST நிலுவைத் தொகை ஒரு பகுதியை வாங்கிவிட்டாரே.”. என்று, அதற்கு தோழர் ” பாக்கி பணத்தை வாங்க வக்கில்ல.. இதுல என்ன பெருமை வேண்டிக்கெடக்கு..” என்று பதிலுரைக்கிறார். நிலாவை இயல்பாக பார்ப்பவர்களுக்கு அதன் ஒளிரும் தன்மை முதன்மையாகக் தெரியும். வெகு சிலருக்கு அதன் கரை பெரிதாகத் தெரியும்.
  பிரபாகரனை விமர்சிக்கும் நக்சலைட்டுகளை வண்டி வண்டியாக திட்டி விவாதத்திற்கு அழைக்கும் திருமுருகன் காந்தி நட்பு சக்தி ஆகிவிட்டார். ஆனால் திமுக பாஜகவைப் போல எதிரி என்று புரிந்து கொள்ள வேண்டுமாம்..
  பழைய திமுக ஆட்சியின் கசப்புணர்வு இன்னும் மிச்சமிருக்கும் என்னைப் போன்றோரையே திமுக மேல் காதல் கொள்ள வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது..!
  நடக்கும் மு.க.ஸ்டாலினின் ஆட்சியினை ஜோசப் ஸ்டாலினின் ஆட்சி என்று தவறாக புரிந்து கொண்டார்களோ தோழர்கள்..!
  நாம் ஜோசப் ஸ்டாலினின் ஆட்சியை ஏற்படுத்தி அதில் தவறுகள் நடந்தால் நிச்சயம் தோழர் எதிர்பார்பதை போல நம் சகிப்புத்தன்மையின் அளவைக் குறைத்துக்கொண்டு கடுமையாக விமர்சிக்கலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க