ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனி ஆக்கப்படும் கல்வி | ம.க.இ.க ஆவணப்படம்

ஏழை, நடுத்தர மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டு, எப்படி அவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாக மாற்றப்படுகிறது என்பதை பற்றியான ஒரு காணொலிதான் இந்த ஆவணப்படம்.

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைந்து”
ஒரு தலைமுறையில் பெரும் கல்வி அறிவானது எழுதலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் என்று கல்வியின் அவசியத்தை தீர்க்கமாக வலியுறுத்துகிறார் திருவள்ளுவர்.
அதுமட்டுமல்ல, இன்று உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள் பலர், மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு கல்வி எவ்வளவு அவசியம் என்பதை பற்றி பல்வேறு இடங்களிலும் குறிப்பிடுகிறார்கள். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த கல்வி இன்று தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வியை ஓர் கடை சரக்காக மாற்றிவிட்டன. ஏழை, நடுத்தர மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டு, எப்படி அவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாக மாற்றப்படுகிறது என்பதை பற்றியான ஒரு காணொலிதான் இந்த ஆவணப்படம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
தயாரிப்பு – வீடியோ ஆக்கம் : ம.க.இ.க
உதவி : புரட்சிகர மாணவர் –  இளைஞர் முன்னணி, மாநில ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்நாடு.
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு – புதுவை.
9791653200

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க