யோகி ஆதித்யநாத்-ஐ எதிர்த்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டாலே கைது !

சமூக வலைதளங்களில் பாஜகவையும், சங் பரிவார கும்பலையும் விமர்சனம் செய்யும் முற்போக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், மாணவர்கள் - இளைஞர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை ஏவி வருகிறது உ.பி யோகியின் பாசிச அரசு.

0
த்தரப்பிரதேசம் முதல்வர் ரவுடி சாமியார் யோகி ஆதித்தநாத்-க்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடும் மாணவர்கள் & இளைஞர்கள் கடந்த சில மாதங்களாக கைது வழக்குகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் 13 அன்று சமூக ஊடகங்களில் முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக “ஆட்சேபத்துக்குரிய கருத்துக்கள்” தெரிவித்ததற்காக 19 வயது சிறுவனை உத்தரப்பிரதேச போலீசுத்துறை கைது செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அக்ரம் அலி, கஜ்னி போலீசு நிலையத்தின் எல்லைக்குள் இருக்கும் டெடாரியா கிராமத்தில் வசிப்பவர், ஒரு ஓவியர் என்று கூறப்படுகிறது.
ஜூன் 12 அன்று இரவு 11 மணியளவில் அவர் தனது வாட்ஸ்ஃஅப் ஸ்டேட்டஸாக “ஆதித்யநாத்துக்கு எதிரான ஆட்சேபத்துக்குரிய இடுகையை” பதிவேற்றியதாகவும் அது வைரலானதாகவும் போலீசு கூறியுள்ளது. அக்ரம் அலி-யின் மீது ஐ.பி.சி 504, 505, 469, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 295 ஆகிய பிரிவுகளின் கீழ் கஜ்னி போலீசு நிலையம் வழக்கு பதிவு செய்துள்ளது.
படிக்க :
அசாம் : மாட்டுகறி கொண்டுவந்தால் குற்றம் – பள்ளி தலைமை ஆசிரியர் கைது !
அதேபோல் இந்த ஆண்டு மே மாதம், உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிறார் நீதி வாரியம், முதல்வர் யோகி ஆதித்யநாத் பற்றிய “ஆட்சேபனைக்குரிய” பதிவைப் பகிர்ந்ததற்காக ஒரு சிறுவனை கைது செய்தது. அந்த 15 வயது சிறுவனை 15 நாட்கள் பசுக்கள் காப்பகத்திலும், 15 நாட்களுக்கு பொது இடத்தை சுத்தம் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு பற்றி வழக்கறிஞர் அதுல் சிங், “குற்றம் சாட்டப்பட்டவர் சமூக ஊடகங்களில் ஒரு ஆட்சேபனைக்குரிய செய்தியுடன் முதல்வரின் மார்பிங் படத்தைப் பகிர்ந்துள்ளார். ஐ.பி.சி பிரிவு 505, ஐடி சட்டத்தின் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் சிறுவனுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவன் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்”என்றார்.
அதேபோல் கடந்த மார்ச் மாதம், உத்தரப்பிரதேசத்தின் கவுதம் புத் நகரைச் சேர்ந்த 24 வயது நபர் ஒருவர் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முன்னாள் முதல்வர் மாயாவதி ஆகியோரின் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில், மார்ச் 15 அன்று கைது செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் அமீர் கான், ஜெவார் போலீசு நிலைய எல்லைக்குட்பட்ட தயானத்பூர் கிராமத்தில் வசிப்பவர். மார்ச் 15 அன்று காலை சபௌடா சுரங்கப்பாதைக்கு அருகில் அவர் கைது செய்யப்பட்டார். கான் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 152பி, 505(2), தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் மே 2020-ல், உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் குறித்து பேஸ்புக்கில் ‘ஆட்சேபகரமான கருத்துக்களை’தெரிவித்ததாக இளைஞர் ஒருவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அலகாபாத்தில் உள்ள ஷிவ்குடி போலீசு நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு தனிநபரின் ஃபேஸ்புக் இடுகைக்கு பதிலளிக்கும் வகையில் அந்த நபர் ஆதித்யநாத் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகள் கூறியதாக எஃப்ஐஆர் குற்றம் சாட்டியுள்ளது. அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 124A (தேசத்துரோகம்), 500, 188, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாசிஸ்டுகள் எப்போது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இந்நிலையில் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் ஆகியவற்றை இந்த பாசிஸ்டுகளிடன் எதிர்ப்பார்க்க முடியுமா? அவர்களை பற்றி விமர்சன கருத்துக்களை கூறினாலே பாசிச நடவடிக்கை பாய்கிறது.
சமூக வலைதளங்களில் பாஜகவையும், சங் பரிவார கும்பலையும் விமர்சனம் செய்யும் முற்போக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், மாணவர்கள் – இளைஞர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை ஏவி வருகிறது உ.பி யோகியின் பாசிச அரசு. காவி – கார்ப்பரேட் பாசிசத்தை மோதி வீழ்த்துவதே ஜனநாயகத்தின் மீதான கொடுங்கரங்களை உடைப்பதற்கான ஒரே வழியாக இருக்க முடியும்.

புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க