கள்ளக்குறிச்சியா… காஷ்மீரா? பள்ளியை காப்பாற்றும் டிஜிபி – மூடிமறைக்கப்படும் உண்மை! | வீடியோ

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த நேர்காணல் வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.

கள்ளக்குறிச்சியா… காஷ்மீரா? பள்ளியை காப்பாற்றும் டிஜிபி
– மூடிமறைக்கப்படும் உண்மை! | வீடியோ

அனைத்து தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பொதுவாகவே மாணவர்கள் படிக்கவில்லையென்றால் அடிப்பது, படிக்க வைப்பதற்காக அடிப்பது  பல்வேறு சம்பவங்கள் நடந்திருக்கிறது. அப்படிதான் இந்த பள்ளியிலும் நடந்திருக்கிறது.

தற்போது ஸ்ரீமதி என்கிற மாணவி இறந்திருக்கிறார். இதற்கு மறுகூறாய்வு செய்யவேண்டும் என்பதுதான் மாணவியின் பெற்றோர் கேட்கும் நியாயமான கேள்வி. ஆனால், அதை செய்யாமல் ஏன் நீதிமன்றத்திற்கு போ என்கிறார்கள். அரசு தரப்பில் இருப்பவர்களை வைத்துக்கொண்டு உடல்கூறு ஆய்வு செய்யவேண்டும் என்கிறார்கள் இது ஓர் நியாயமான கோரிக்கை. இதற்கு ஏன் நிர்வாகம் மறுக்கின்றது.

இறந்த மாணவின் உடலை பெற்றோர்கள் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. உடலை பார்க்கவே பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளனர். இன்றைக்கு வன்முறை என்று கூறும் போலீசு, அன்றைக்கே பிரச்சினையில் தலையிட்டு சரி செய்திருக்க வேண்டும் அல்லவா? இதை ஏன் செய்யாமல் பிரச்சினையை மூடி மறைக்கிறார்கள்.

என் மகள் எப்படி இறந்தாள் என்று தெரியவேண்டும் என்று பெற்றோர்கள் கேட்கிறார்கள்; இதை கூட செய்யாமல் மூடி மறைக்க இந்த பள்ளி நிர்வாகம் ஏன் முயற்சிக்கிறது. ஆசிரியர் பெருமக்களை அப்படியெல்லாம் கைது செய்யமுடியாது என்று டிஜிபி சொல்கிறார். ஆஹா! இப்படி ஒரு கன்னியமிக்க மனிதநேயம் மிக்க போலீசுத்துறையை நாம் எங்கேயும் பார்க்க முடியாது. வீரப்பனை பிடிக்கிறேன் என்று சென்று அங்கு இருந்த பழங்குடியின பெண்களை போலீசு செய்த சித்திரவதையின் யோக்கிதை நமக்கு தெரியாதா?

ரெட் பிக்ஸ் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணல் வீடியோவில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் பற்றிய பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

1 மறுமொழி

  1. மருது பேட்டி பரிதவிப்பும் உணர்ச்சியும் நிறைந்த்ததாக உள்ளது.
    https://youtu.be/2TB0Ndf4Ifw பள்ளி நிறுவனத்திற்கு அர்.எஸ்.எஸ. பின்புலம் இருப்பதை அப்பலப்படுத்துகிறார்,செந்தில்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க