கள்ளக்குறிச்சி : கொலைகார சக்தி பள்ளியை காப்பாற்ற வன்முறையை தூண்டுவது அரசுதான்! | மருது வீடியோ

தனியார் பள்ளி முதலாளிகள் மிரட்டல் விடுகிறார்கள். பள்ளிகளை மூடுகிறார்கள். அவர்களிடம் என்ன செய்தது திமுக அரசு. ஆனால், இங்கு மக்களை கைது செய்கிறது. 144 தடை உத்தரவை போட்டுள்ளது. எதற்கு இந்த அடக்குமுறை.

ள்ளக்குறிச்சியின் கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளிக்கு எதிராக நடக்கும் போராட்டம் வன்முறை என்கிறது அரசு. ஆனால், மர்ம மரணம் அடைந்த மாணவியின் உடலை கூட தாய்க்கு காட்டாமல் இந்த அரசுதான் வன்முறை செய்து வந்தது.

திட்டமிட்டு போராடுபவர்களை அவதூறு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபடுகிறது போலீசு, முகநூலில் பதிவிட்டவர்கள், லைக் போட்டவர்கள் குற்றவாளி என கூறுகிறது போலீசு. அப்படியென்றால், தமிழ்நாடு காஷ்மீரை போல நடத்தப்படுகிறது என்பதுதான் உண்மை. காஷ்மீரில் ஜாமர் கருவி வைத்தார்கள் இங்கும் வைக்கிறார்கள். கருத்து சொல்பவர்களை எல்லாம் கைது செய்து வருகிறார்கள்.

திமுகவை சேர்ந்தவர்கள் ஏன் கலவரம், வன்முறை என்று போராட்டத்தை சிறுபிள்ளைத்தனமாக கொச்சை படுத்தி வருகிறார்கள். இந்த மரணத்தின் உண்மை என்ன? இது தனியார்மயத்தின் கொலைகார நடவடிக்கை இது. இந்த தனியார்மயத்தை பற்றி ஏன் திமுக பேசுவதில்லை.

தாயின் அழுகுரல் கேட்டு போராடியவர்கள் அனைவரையும் கைது செய்தார்கள் என்றால், பள்ளியின் தாளாளர் உடன் புகைப்படம் எடுத்திருக்கும் அனைவரையும் கைது செய்வீர்களா? டிஜிபி-முதலமைச்சர் இந்த நடவடிக்கை எடுப்பார்களா?

போராடியவர்களை தேடி தேடி அடிக்கிறாயே! கைது செய்கிறாயே! 144 தடை உத்தரவு போடுகிறாயே! பள்ளிக்கூடத்தில் காண்டம் வைத்திருந்ததாக கூறப்படும் பள்ளியின் தாளாளர் மீது உங்கள் நடவடிக்கை என்ன? உங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை

தனியார் பள்ளி முதலாளிகள் மிரட்டல் விடுகிறார்கள். பள்ளிகளை மூடுகிறார்கள். அவர்களிடம் என்ன செய்தது திமுக அரசு. ஆனால், இங்கு மக்களை கைது செய்கிறது. 144 தடை உத்தரவை போட்டுள்ளது. எதற்கு இந்த அடக்குமுறை.

கொலைகார சக்தி பள்ளியின் கள்ளக்குறிச்சி மாடல் இன்று உருவாக்கப்பட்டுவிட்டது. இந்த தனியார்மய கல்விக்கு எதிரான போராட்டத்தை பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு தமிழ் மின்ட் யூடியூப் சேனலின் இந்த பேட்டி வீடியோவில் பதில் அளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க