கள்ளக்குறிச்சி போராட்டம்: வன்முறைக்கு காரணம் போலீசும், நிர்வாகமும்தான் | மருது வீடியோ

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு IBC தமிழ் யூடியூப் சேனலுக்கு இந்த பேட்டி வீடியோவில் பதில் அளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!

டிஜிபி, முதலமைச்சர் போன்ற உச்சபட்ச அதிகாரம் படைத்தவர்கள் இந்த கள்ளக்குறிச்சி மரண விவகாரத்தில் தலையிடவேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது. இதற்கு, சாதாரண ஓர் பிரச்சினையை முடிமறைக்க நினைக்கும் மாவட்ட நிர்வாகம்-போலீசு துறையின் செயல்பாடுகள்தான் அடிப்படையாக அமைகிறது.

அந்த பள்ளி நிர்வாகத்தின் சாந்தி என்பவர் திமிர்தனமாக வீடியோ வெளியிடுகிறார். அதாவது இறந்து போன மாணவிக்கு பொறுப்பு பள்ளிக்கூடம் கிடையாது. ஆனால் வன்முறையில் எரிக்கப்பட்ட பொருட்களுக்கு மாணவியின் அம்மாதான் பொறுப்பு என்கிறார்.

இந்த கள்ளக்குறிச்சி வன்முறைக்கு காரணம் மக்கள் அல்ல; மாறாக இந்த போலீசும் மாவட்ட நிர்வாகமும்தான் அவர்கள்தான் கைதுசெய்யப்படவேண்டும். அவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு IBC தமிழ் யூடியூப் சேனலுக்கு இந்த பேட்டி வீடியோவில் பதில் அளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !!

11 மறுமொழிகள்

  1. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவிமர்மமான முறையில் மரணம்!

    அரசு: அதிகாரவர்க்கத்தின் மவுனத்திற்கு காரணங்கள்.
    1) தன் வர்க்கத்தின் குலக்கொழுத்தை காப்பாற்றுதல்,
    2) போராட்ட களத்தில் நிற்கும் உண்மையான போராட்டக்காரர்கள் மற்றும் அப்பாவி இளைஞர்களை பிடித்து வழக்கு போட்டு மாநிலத்தையே மிரட்டுதல்,
    3) போராட்டத்திற்குள் கலந்துள்ள சங்கிகளை காப்பாற்றுதல்…

  2. உடற்கூறாய்வு முடிவு குறித்து மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லவேண்டும்.

    குற்றவாளி குறித்த விவாதத்தை மறைக்க திட்டமிட்டவன்முறை ஏவிவிட்டுள்ளனர்.

    13ஆம் தேதி அதிகாலை
    போலீசு குவிந்தது எப்படி?

    அரசை இயக்குவது யார்?

    குற்றவாளிகள் உடமையற்ற வர்க்கப்பின்னணி என்றால் என்கவுன்டர் செய்திருக்கும் போலீசு.
    (உதாரணம்: தாமிரபரணி 17 பேர் படுகொலை, தூத்துக்குடி 15 பேர் சுட்டுக்கொலை இன்னும் ஏராளம். சமீபத்தில் ஆந்திராவில் 4 பேர் என்கவுன்டர் நடந்தது)

  3. சிறப்பு..!
    நெறியாளர் ” வன்முறைக்கு உங்களைப் போன்ற இயக்கங்கள்தான் காரணம் என்று பேசுகிறார்களே..!” என்று கேட்டதற்கு, “அவர்கள் எங்களை தீவிரவாதிகள், வன்முறையாளர்கள் என என்ன பெயர் கொண்டும் அழைத்துக் கொள்ளட்டும். ஆனால் அவர்கள் மக்களுக்கு சரியான பதில் அளிக்காமல் விடமாட்டோம்” என்ற தோழரின் துணிவு 90களில் கருவறை நுழைவு மற்றும் இறால் பண்ணை அழிப்பு போராட்டங்கள் காலத்து போர்க்குணத்தை நினைவூட்டுகிறது.
    வாழ்த்துகள் தோழர்களே..!

  4. இந்த போலி போராளிகள் எல்லாம் மதம் பார்த்து தான் போராடுவார்கள்.

    தஞ்சை லாவண்யா மதமாற்ற கூட்டங்களின் (இந்த போலி போராளிகளின் எஜமானர்கள்) கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார் அப்போது மதம் பார்த்து இந்த போலி போராளிகள் வாய் மூடி மௌனமாக இருந்தார்கள். திராவிட அரசியல் கட்சிகளும் அதன் ஊடகங்களும் மௌனமாக இருந்தன அல்லது பிரச்சனையை திசை திருப்பியது.

    உண்மையில் குரலற்றவர்களுக்கு குரல் கொடுக்க தமிழகத்தில் ஒருவருமே இல்லை.

    • தனியார் மயக்கல்விக்கு எதிராக பல ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகிறார்கள். ஆனால், பி.ஜே.பி – அதிமுக போன்ற கட்சிகள் மதமாற்ற பிரச்சினையை தானே கிளப்பி கலவரம் செய்ய முயற்சிக்குமே தவிர கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்திற்கு காரணமான கொலைகார தனியார் பள்ளியை எதிர்த்து பேசாது அல்லவா?

      • நான் கேட்ட கேள்வி லாவண்யா போன்ற குரலற்றவர்களுக்கு ஏன் இந்த போலி போராளிகள் குரல் கொடுக்கவில்லை என்பது தான், லாவண்யா போன்ற ஏழைகள் எக்கேடுகெட்டாலும் கவலையில்லை என்ற இந்த பாசிச மத மாற்ற கைக்கூலிகள் நினைக்கிறார்களா ?

        பாசிச மதமாற்ற கைக்கூலிகள் = போலி போராளிகள்

        • https://www.youtube.com/watch?v=gIPgggSkTZU&t=6s
          உழைக்கும் மக்களின் விடுதலைக்கான போராடும் தோழர்கள் இவர்கள். கொச்சை படுத்தாதீர்கள்!

          லாவண்யா மரணத்தை மதக்கலவரமாக மாற்ற முயற்சித்த பாஜகவின் அண்ணாமலை, கள்ளக்குறிச்சி கொலைகார பள்ளிக்கு எதிராக பேசவில்லையே ஏன் என்று பதில் சொல்லுங்கள்!

          • லாவண்யாவின் மரணத்தை வைத்து மதக்கலவரம் ? உண்மையிலேயே நீங்கள் எல்லாம் மனித தன்மை உள்ளவர்கள் தானா என்று சந்தேகிறேன்.

            படிக்க வந்த ஒரு மாணவியின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி நீ மதம் மாறு என்று பள்ளி கூடத்தில் கேட்டு இருக்கிறார்கள், ஒட்டு மொத்த குடும்பத்தையும் மதம் மாற சொல்லி இருக்கிறார்கள்.

            இந்த விவகாரத்தை அனைத்து மட்டத்திலும் மூடி மறைத்து என்னமோ பிஜேபி தான் மதக்கலவரத்தை தூண்ட பார்க்கிறது என்று அனைவரும் போலியாக ஒரு பிம்பத்தை உருவாக்கி, அந்த சிறுமிக்கு நடந்த அநீதியை மறைத்து விட்டிர்கள்.

            நீங்கள் திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு Genocide க்கு துணை நின்று இருக்கிறீர்கள்.

          • உண்மையில் உழைக்கும் மக்களுக்கு உங்களை போன்ற போலி பாசிச மதவாத கைக்கூலிகளிடம் இருந்து தான் விடுதலை கிடைக்க வேண்டும்.

            தோழர்கள் என்று சொல்லி தோழமையை இழிவு செய்யாதீர்கள்.

            • வாங்க பகவானே..! எங்க ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க போலிருக்கு..!!

              • கள்ளக்குறிச்சியில் உங்கள் கூட்டங்கள் செய்த வன்முறையால் ஏற்பட்ட மன வேதனை மீண்டும் வர வைத்து இருக்கிறது 🙁

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க