கள்ளக்குறிச்சியில் போராடியவர்கள் மீதான ஒடுக்குமுறை: உ.பி.யோகிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! | மருது வீடியோ

அன்று, தூத்துக்குடி போராட்டத்தை ஒடுக்கும் ஓர் அரச வன்முறையை தூத்துக்குடி மாடல் என்று அதிமுக அரசு செய்து காட்டியது. அதே நடவடிக்கையை இன்று கள்ளக்குறிச்சி மாடல் என்று திமுக அரசு செய்து வருகிறது.

மாணவி ஸ்ரீமதி இறந்த பல மணிநேரத்திற்கு பிறகுதான் பெற்றோர்களுக்கு தெரிவிக்கிறார்கள். மரணத்தை மறைந்தார்கள் என்ற ஒரே ஒரு புள்ளியை மட்டும் வைத்துக்கொண்டு பள்ளி நிர்வாகத்தை கைது செய்திருக்க முடியும்.

எப்படி மாணவி இறந்தார் என்று சி.பி.சி.ஐ.டி பல நாள் கழித்து பொம்மையை மேலிருந்து தூக்கிப்போட்டு ஆய்வு செய்கிறது. மக்களை பைத்தியகாரர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?

இது ஒரு விளம்பர ஆட்சி; சைலேந்திரபாபு விளம்பரம் செய்வார். ஸ்டாலின் விளம்பரம் செய்வார். அதேபோல் இந்த மாணவியை வைத்துக்கொண்டு போலீசு ஒரு விளம்பரம் செய்கிறது. மக்கள் போராட்டத்தை தனியாகவும், கலவரக்காரர்கள் என்று தனியாகவும் பேசுவதன் நோக்கம் என்ன?

யோகி ஆதித்யநாத்திற்கும் மு.க.ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லை என்று அவர்கள் மீண்டும் மீண்டும் கள்ளக்குறிச்சி போராட்டத்தின் மீதான ஒடுக்குமுறையின் மூலம் நிருபிக்கிறார்கள்.

ஒரு தனியார் கல்வி நிறுவனத்திற்கு ஏற்பட்ட சேதத்திற்கு ஏன் இந்த அரசு கொந்தளிக்கிறது?

அன்று, தூத்துக்குடி போராட்டத்தை ஒடுக்கும் ஓர் அரச வன்முறையை தூத்துக்குடி மாடல் என்று அதிமுக அரசு செய்து காட்டியது. அதே நடவடிக்கையை இன்று கள்ளக்குறிச்சி மாடல் என்று திமுக அரசு செய்து வருகிறது.

அந்த மாணவி உயர்சாதியாக இருந்தாலும் போராட்டத்தில் தலித் மக்களும் வன்னிய மக்களும் இணைந்து கலந்து கொண்டார்கள். தமிழ்நாட்டில் ஒரு சமூக மாற்றமோ; அல்லது அநீதிக்கு எதிரான போராட்டமோ சாத்தியம் என்று நிரூபித்தப் போராட்டம் இந்த கள்ளக்குறிச்சி தனியார் கல்விக்கு எதிரான போராட்டம்.

மேலும் பல்வேறு கேள்விகளுக்கு தமிழ் குரல் என்று யூடியூப் சேனலின் பேட்டி வீடியோவில் பதில் அளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க