தனியார் கல்விக்கு எதிரான போராட்ட(கள்ளக்குறிச்சி)மாடல் பரவி விடக்கூடாது என்பதே திமுக அரசின் நோக்கம்! | மருது வீடியோ

சக்தி பள்ளிக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சாதித்துவிட்டால் இந்த போராட்டம் வடிவம், அடுத்து பல தனியார்பள்ளிகளுக்கு பரவும். தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு பரவும் இது முதலாளிகலுக்கு மிகப்பெரிய பிரச்சினை.

ள்ளக்குறிச்சி படுகொலை பற்றி உளவுத்துறை சாதிய பிரச்சினை என்று கூறியுள்ளது. உளவுத்துறையின் நோக்கமே போராடியவர்களை போக்கிரிகளாகவும், பயங்கரவாதிகளாக்வும் கூறி தனிமைப்படுத்துவது தான் நோக்கம்.

அரசின் நோக்கம் எப்போதும் மக்கள் பிளவுபட்டே இருக்க வேண்டும். தனியார் பள்ளியில் ஏதேனும் பிரச்சினையேன்றால் பள்ளி முன் அமரவேண்டும் போராட்டவேண்டும் என்ற இந்த நடைமுறை தமிழகம் முழுவதும் உள்ள 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் நிலைமை என்ன ஆகும் என்பதுதான் அரசுக்கு பிரச்சினை.

அனைவரிடமும் பேசும் முதல்வர் ஸ்டாலின் ஏன் மாணவி ஸ்ரீமதியின் பேற்றோர்களிடம் பேசவில்லை.

தூத்துக்குடி மாடல் என்பது அரசுக்கு துப்பாக்கிச்சூடு மாடல்; மக்களுக்கு சாதி மதம் கடந்த கார்ப்பரேட் கம்பெனிக்கு எதிராக போராடி வெற்றிபெற்ற வீரம் செறிந்த போராட்ட மாடல். அதேபோல், ஜல்லிக்கட்டு மாடல் என்பது அரசுக்கு வன்முறை செய்து ஒடுக்கிய மாடல்; மக்களுக்கு ஒரு பொதுக்கோரிக்கைக்கான தமிழகமே பலநாட்கள் அமைதி வழியில் போராட்டி சாதித்த மாடல். அதேபோல் கள்ளக்குறிச்சி மாடல் என்பது அரசுக்கு கலவரம் செய்தவர்களை ஒடுக்கிய மாடல்; மக்களுக்கு தனியார் பள்ளிகளை எதிர்த்து இப்படித்தான் போராடவேண்டும் என்று சொல்லும் தனியார் கல்விக்கு எதிரான போராட்ட மாடல். இந்த மாடல் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் பரவினால், உழைக்கும் மக்களின் போராட்டம் என்ன பரிமானத்தை அடையும் என்று யோசித்து பாருங்கள்!

கொலைகார சக்தி பள்ளியின் உரிமையாளரை காப்பாற்ற துடிப்பதன் காரணம் என்ன? இந்த பள்ளிக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சாதித்து காட்டிவிட்டார்கள் என்றால் இந்த போராட்டம் வடிவம், அடுத்து பல தனியார்பள்ளிகளுக்கு பரவும். தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு பரவும் இது முதலாளிகலுக்கு மிகப்பெரிய பிரச்சினை.

எந்த காலத்திலும் முதல்வர் ஸ்டாலினும் டிஜிபி சைலேந்திரபாபுவும் தனக்கு கீழ் இருக்கும் அதிகார வர்க்கத்தை காட்டிக்கொடுக்க மாட்டார்கள்.

இதுபோன்ற பல கேள்விகளுக்கு ரெட் பிக்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் பேட்டி வீடியோவில் விடையளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

1 மறுமொழி

  1. தனியார் பள்ளி கூடத்திற்கு எதிரான போராட்டம் என்று நீங்கள் சொல்வது சும்மா வெளிவேஷம் உங்களின் வார்த்தைகளில் உண்மையில்லை.

    உங்களின் நோக்கம் வேறு

    ஒரு கூட்டம் சீனா வட கொரியாவிற்கு விசுவாசம் கேட்டால் எங்களுக்கு தேசம் (இந்தியா) முக்கியம் இல்லை மக்கள் தான் முக்கியம் என்று சொல்வார்கள் (அதுவும் சீனா தான் முக்கியம்)

    இன்னொரு கூட்டம் சவூதி பாகிஸ்தானுக்கு விசுவாசம் இவர்களுக்கும் தேசம் (இந்தியா) முக்கியம் இல்லை அவர்களின் மதம் தான் முக்கியம்.

    வேறு ஒரு கூட்டம் வாடிகனுக்கு விசுவாசம் இவர்களுக்கும் தேசம் (இந்தியா) முக்கியம் இல்லை அவர்களின் மதம் தான் முக்கியம்.

    இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமைகள்

    1. ஹிந்து விரோதம் அதன் அடிப்படையில் இந்தியா விரோதம், இதை நியாயப்படுத்த ஆயிரத்தி எட்டு நொண்டி சாக்குகளை.
    2. மாற்று கருத்துக்கள் நம்பிக்கைகளுக்கு எதிரான சகிப்பின்மை
    3. இந்த மூவருமே மாற்று கொள்கைகளை அழித்து அவர்களின் கொள்கையை உலகம் முழுவதும் கொண்டு வர பார்க்கிறார்கள்.
    4. இந்த முட்டாள்தனத்திற்கு உலகம் முழுவதும் பல ஆயிரம் அப்பாவி மக்கள் பலியாவது பற்றி இந்த மூவருக்குமே கவலையில்லை.

    ஆண்டவன் தான் மனித இனத்தை இந்த அடிப்படைவாதிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க