தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: வேதாந்தாவிற்கு அடியாள் வேலை பார்த்த போலீசு-கலெக்டர்! | தோழர் அமிர்தா வீடியோ

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீசுத்துறையை அம்பலப்படுத்தும் அருணா ஜெகதீசன் அறிக்கையை பற்றியும் தூப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பற்றியும் தமிழ்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்....

தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுக்கள் தொடர் போராட்டங்களை மக்களை இணைத்துக்கொண்டு நடத்தியதன் விளைவாகத்தான் இந்த கமிஷனே அமைக்கப்பட்டது. இந்த கமிஷனுடைய அறிக்கை என்பது அன்று மக்கள் அதிகாரம் போன்ற மக்களை சார்ந்த அமைப்புகள் என்ன சொன்னமோ அதுதான் இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் பார்க்கிறோம். அவர்கள் பல்வேறு விசயங்களை சொல்லி இருக்கிறார்கள்.

17 போலீசு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். துறைசார்ந்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக அன்று சொல்லப்பட்டது என்ன? போலீசில் பலபேர் பாதிக்கப்பட்டர்கள்; அதனால் தான் சுட்டோம் என்று கூறியது. பிஜேபியை சார்ந்த தமிழிசை சௌந்தரராஜன், அன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை என்றால் ஆயிரம் பேர் செத்துபோய் இருப்பார்கள் என்று கூறினார். ஆனால் இந்த அறிக்கை என்பது இவர்கள் சொன்ன அனைத்து பொய் என்று நிருபித்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீசுத்துறையை அம்பலப்படுத்தும் அருணா ஜெகதீசன் அறிக்கையை பற்றியும் தூப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பற்றியும் தமிழ்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்….

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க