31 நாட்களில் 133 கொலைகள் – பாஜக என்பது குற்றவாளிகளின் கட்சி – குற்றவாளிகளுடன் கைகோர்க்கும் போலீசு | மருது வீடியோ

பாஜக - போலீசு அதிகார வர்க்க குற்றவாளிகளை பற்றி தமிழ் மின்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

ராஜாஜி முதலமைச்சராக இருக்கும் போது எதிர் கட்சியை சார்ந்த நபர் ஒரு கேள்வி கேட்கிறார். போலீசுக்கு நீங்கள் ஊதிய உயர்வு கொடுப்பீர்களா என்று, அப்போது ராஜாஜி சொல்கிறார் அவர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் எந்த வழியில் ஊதியத்தை பெறவேண்டுமோ அந்த வழியில் ஊதியத்தை பெற்றுக்கொள்வார்கள் என்றார்.

சாதிய படுகொலை நடத்துகிறார்கள். இளவரசன் திவ்யா பிரச்சினையை ஒட்டி தருமபுரியில் வீடுகளை கொளுத்தினார்கள். அங்கிருந்த இடைநிலை சாதியை சார்ந்தவர்கள், காதல் செய்தால் இப்படித்தான் நடக்கும் என்று அதற்கு அங்கிகாரம் கொடுத்தார்கள். இதை பார்த்துக்கொண்டிருக்கும் மற்றவர்கள் இப்படிப்பட்ட செயல்களில் ஏன் ஈடுபடமாட்டார்களா?

துப்பாக்கி யாரிடம் உள்ளது போலீசிடம்; போலீசு யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக; கார்ப்பரேட்டும் சாதிவெறியர்களும் மதவெறியர்களும் போலீசும் கூட்டாகத்தான் இருக்கிறார்கள். இவர்கள் கையில் இருக்கக்கூடிய இந்த சட்டமும் அதிகாரமும் ஒருபோதும் இந்த உழைக்கும் மக்களுக்கு உதவாது.

பாஜக – போலீசு அதிகார வர்க்க குற்றவாளிகளை பற்றி தமிழ் மின்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க