மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: அனைத்து மர்ம மரணங்களும் நீதி கிடைக்காமல் ஊற்றி மூடப்பட்டுவிட்டது! | மருது வீடியோ

ஸ்ரீமதியை கொலை செய்த கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி மீண்டும் திறக்கப்படுவது தொடர்பான பல்வேறு கருத்துக்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

மாணவி இறந்து போனது தொடர்பான எவ்வித முடிவும் எட்டப்படாமல், அதற்கு முன்பே மாணவி தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார், அதுவும் தனது சொந்த பிரச்சினையின் காரணமாகத்தான் என்று ஏறக்குறைய தீர்ப்பு வந்துவிட்டது.

இந்த சூழ்நிலையில்தான் அந்த பள்ளியை மறுசீரமைப்பு செய்வதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமையை வைத்து பார்க்கும்போது, போராடி வெற்றிபெற முடியுமா என்ற கேள்விதான் பலருக்கும் எழும். ஆனால் அதனை அப்படி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு போராட்டம் என்பது யாரை எதிர்த்து என்பதுதான் மிகவும் முக்கியமானது.

அது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பிண்ணனி கொண்ட ஒரு பள்ளி. தனியார் பள்ளி முதலாளிகள் – 9987 பள்ளிகளை வைத்திருக்கக் கூடிய ஒரு கூட்டமைப்பு ஒரு மிகப்பெரிய லாபி. இவர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம். இவர்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் இருக்கிறது. தற்போது நீதிமன்றம் பள்ளியை இயக்க பரிசீலனை பன்னுங்கள் என்று கூறியுள்ளது.

மாணவியின் தாய் தோற்று விட்டார். பள்ளியை நிர்வாகிக்கு பொறுப்பை மீண்டும் அதே குடும்பத்திற்கே வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஏற்கனவே பள்ளியில் நடைபெற்ற சம்பவங்கள் அப்படியே நீடிக்கும். யாரும் எந்த கேள்வியும் கேட்ட முடியாது. நீங்கள் எத்தனாயிரம் பேரை அழைத்துவந்து எங்கள் பள்ளியை சேதமடைய செய்தாலும் எங்களுக்கு தேவையான நீதியை நாங்கள் எப்படி வேண்டுமானாலும் பெற்றுக்கொள்வோம். நீங்கள் எந்த கேள்வியும் கேட்க முடியாது என்ற இன்னொரு நீதியும் அதனுள் இருக்கிறது.

அதனால் பிரச்சினை ஸ்ரீமதி மட்டுமல்ல… ஸ்ரீமதிக்கும் முன்பு பலர் இறந்திருக்கிறார்களே அந்த மரம மரணங்களுக்கெல்லாம் மொத்தமாக சேர்ந்து ஸ்ரீமதி மரணத்தையும் ஊற்றி மூடிவிட்டார்கள். மேற்கொண்டு அதை பற்றி யாரும் பேசமுடியாது என்று வாயடைத்து விட்டார்கள். தற்போது குற்றவாளியார் ஸ்ரீமதியின் அம்மா என்று வரும். அதற்கு நீதிமன்றம் எங்கேயும் தடை விதிக்கப்போவதில்லை.

ஸ்ரீமதியை கொலை செய்த கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி மீண்டும் திறக்கப்படுவது தொடர்பான பல்வேறு கருத்துக்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க