22.09.2022

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அலுவலகங்களில்
தேசிய புலனாய்வு முகமை சோதனை!

மக்கள் அதிகாரம் கண்டனம்

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் PFI மற்றும் SDPI கட்சி அலுவலகங்கள், உறுப்பினர்களின் வீடுகள் என நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில்  தேசியப் புலனாய்வு முகமை அமைப்புகள் சோதனை என்ற பெயரில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளன.

பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கொள்கைகளை எதிர்க்கக் கூடிய  எதிரக்கட்சியினர் மற்றும் செயற்பாட்டாளர்களை  ஒடுக்குவதன் தொடர்ச்சியாகவே பி.எப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி மீது தேசிய புலனாய்வு முகமை சோதனை என்ற பெயரிலான அடக்குமுறையை மேற்கொண்டிருக்கிறது.

பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கட்சிகளுக்கு எதிரான நிலைப்பாடுகள் உடைய ஜனநாயக மற்றும் புரட்சிகர சக்திகளை தடை செய்யும் நோக்கத்தில் முன்னோட்டமாகவே மேற்கண்ட அமைப்புகளின் மீதான சோதனையை காண வேண்டி உள்ளது.

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பிரச்சாரத்தை தொடங்கிய பி.ஜே.பி , இன்று தன்னைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளையும் சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத முறைகளில் அழித்துக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவது நம்முடைய கடமையாகும். ஆகவே பி.எஃப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ மீதான தேசிய புலனாய்வு முகமை நடத்தும் சோதனையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க