29.09.2022

மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றை தடை செய்ய சொல்லும் பயங்கரவாதி அர்ஜுன் சம்பத்தை கைது செய் !

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகிய பாசிச சக்திகளை தடை செய்!

பத்திரிகை செய்தி

எங்கு சென்றாலும் சாதி – மத வெறி கருத்துக்களை பரப்பிவரும் பயங்கரவாதியான அர்ஜுன் சம்பத், குலசை தசரா திருவிழாவிற்கு சென்று அங்கே மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், உடனே திறக்க வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் நிறுவனம் மூடுவதற்கு காரணமாக இருந்த மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு ஆகியவற்றை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மாலேகான் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, குஜராத்தில் முஸ்லீம் மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட கலவரம், ஒரிசாவில் கிறிஸ்துவர்கள் மீது நடத்தப்பட்ட கலவரம் இப்படி பல்வேறு பயங்கரவாத செயல்களை நாடுமுழுவதும் நடத்தியது ஆர்.எஸ்.எஸ் – பாஜக இந்துமதவெறி பார்ப்பன பாசிச கும்பல்தான் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்த அமைப்புகளின் பயங்கரவாதிகள் சட்டத்தால் தண்டிக்கப்படும் இருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகிய பயங்கரவாத அமைப்புகள் தமிழ்நாட்டில் கலவரங்களை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து முயல்கிறார்கள்.

படிக்க : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு பாசிச மோடி அரசு 5 ஆண்டுகள் தடை! | மக்கள் அதிகாரம் கண்டனம்!

இந்து மக்கள் கட்சியின் தலைவரும், பயங்கரவாதியுமான அர்ஜுன் சம்பத், தான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் விரோத கருத்துக்களை பரப்பி வருகிறார். மக்களுக்காக போராடக் கூடிய அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக சித்தரித்து அவற்றை தடை செய்ய வேண்டும் என்றும் கூறிவருகிறார்.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிசத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காகவும் தொடர்ச்சியாக போராடி வருகின்ற அமைப்பு எமது மக்கள் அதிகாரம். இதனால் தமிழ்நாடு முழுவதும் எமது தோழர்கள் போலீசால் கடும் அடக்குமுறைக்கும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனினும் இந்த நாட்டின் மக்கள் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வருகிறது எமது அமைப்பு. எமது அமைப்பின் மீது பாசிச பயங்கரவாதியான அர்ஜுன் சம்பத் போன்றவர்களின் அவதூறுகளை மக்கள் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை.

பல ஆண்டுகளாக தூத்துக்குடி மக்களின் மூச்சுக் காற்றையும் நிலத்தடி நீரையும் நஞ்சாக்கிய ஸ்டெர்லைட் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தை கொச்சைப்படுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று கூறியுள்ளார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உயிரை நீத்த, தங்கள் அங்கங்களை இழந்த போராளிகளைக் கொச்சைப்படுத்தி இருக்கிறார் இந்துமதவெறி பயங்கரவாதியும் தேசவிரோதியும் ஸ்டெர்லைட் கம்பெனியின் கைக்கூலியுமான அர்ஜுன் சம்பத்.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டுக்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடி தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை சுமந்த மக்களை கொச்சைப்படுத்தி இருக்கிறார் இந்த பயங்கரவாதி.

இப்படிப்பட்ட பயங்கரவாத சக்திகளை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும், தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக சாதி – மதவெறி கருத்துக்களையும் மக்கள் விரோத கருத்துக்களையும் தேசவிரோத கருத்துக்களையும் கூறிவருகின்ற பயங்கரவாதியான அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய வேண்டுமென்றும், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற பயங்கரவாத பாசிச அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321.

1 மறுமொழி

  1. இந்த அர்ஜுன் சம்பத் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கிரிமினல் குற்றவாளி! ஜெ ஆட்சியில் அவரது காலை நக்கி விடுதலை பெற்ற அற்பப் பிறவி! இந்த கிரிமினல் கொலைகாரன் பேசுவதை எல்லாம் வெளியிட ஊடகங்கள்! தவிர சொந்த ஊரிலும் அவனது சொந்த மக்களாலேயே விரட்டியடிக்கப்பட்ட கட்டபஞ்சாயத்து பேர்வழியும் கூட! இவன் தான் சிறையில் தள்ளப்பட வேண்டிய மக்கள் விரோதி!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க