2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்று நோயால் வறுமையில் வாடியவர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 80 சதவிதம் பேர் இந்தியர்கள் என்று உலக வங்கியின் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளால் அந்த ஆண்டு உலகளவில் ஏழைகளாக மாறிய 7 கோடி பேரில், இந்தியர்கள் 5.6 கோடி பேர் ஆவர்.

உலகளவில், 2019 ஆம் ஆண்டில் 8.4 சதவிதமாக இருந்த தீவிர வறுமை நிலைகள் விகிகதம் 2020 ஆம் ஆண்டில் 9.3 சதவிதமாக உயர்ந்தது. 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 7 கோடி மக்கள் கூடுதலான வறுமையில் தள்ளப்பட்டனர்.

2011 முதல், இந்திய அரசு வறுமை குறித்த தரவுகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டது. அதிகாரப் பூர்வ தரவு இல்லாததால், உலக வங்கி இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (CMIE) நுகர்வோர் பிரமிடுகள் வீட்டுக் (CPHS) கண்டுபிடிப்புகளை நம்பியிருப்பதாக அது குறிப்பிட்டது. 2020 ஆம் ஆண்டிற்கான CPHS தரவு 5.6 கோடி இந்தியர்கள் வறுமையில் தள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

படிக்க : இயல்பு நிலையாகிவிட்ட இயற்கைப் பேரிடர்கள்! இன்றியமையாதது, முதலாளித்துவத்தின் அழிவு!

2022 ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட, உலக வங்கி தனது சொந்த ஆய்வறிக்கையில் இந்தியாவிற்கான CHPS தரவைப் பயன்படுத்தத் தேர்வுசெய்தது. ஏனெனில் இந்தியாவில் வறுமை அதன் சொந்த மதிப்பீடுகளை விட “கணிசமான அளவு அதிகமாக” உள்ளது.

“2020 ஒரு வரலாற்று திருப்புமுனையைக் குறித்தது – உலகளாவிய வருவாய் ஒருங்கிணைப்பின் சகாப்தம் உலகளாவிய வேறுபாட்டிற்கு வழிவகுத்தது. உலகின் மிக ஏழ்மையான மக்கள் தொற்றுநோய்களின் மிக அதிகமாக செலவுகளுக்கு ஆளானார்கள். பணக்கார நாடுகளின் வருமானத்தை விட ஏழ்மையான நாடுகளில் வருமானம் மிகவும் குறைந்துள்ளது. இதன் விளைவாக, உலகின் மிக ஏழ்மையானவர்களின் வருமான இழப்புகள் உலகின் பணக்காரர்களை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது, மேலும் பத்தாண்டுகளில் முதல் முறையாக உலகளாவிய சமத்துவமின்மை உயர்ந்தது” என்று அறிக்கை கூறுகிறது.

கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னரும், அதிகரித்து வரும் எரிசக்தி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் – காலநிலை மாற்றம் ஆகியவை “விரைவான மீட்சியைத் தடுக்கிறது” என்று குறிப்பிட்டது.

உலகம் “நிச்சயமாக சரி” செய்ய முயற்சிப்பதால், வரவிருக்கும் ஆண்டுகளில் நிதிக் கொள்கைக்கு மூன்று முக்கிய முன்னுரிமை நடவடிக்கைகளை அறிக்கை வழங்குகிறது. ஒன்று, ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்களை இலக்காகக் கொண்ட ஆதரவை நோக்கி மானியங்களிலிருந்து செலவினங்களை மறுசீரமைத்தல். இரண்டு, நீண்டகால வளர்ச்சியை ஆதரிக்க பொது முதலீட்டை அதிகரிப்பது. மூன்று, ஏழைகள் பாதிக்கப்படாமல் பொது வருவாயைத் திரட்டுதல். என்று கூறியுள்ளது. இதனால் ஒருபோது ஏழைமக்களுக்கு தீர்வு காண முடியாது.

***

உலக முதலாளித்துவம் கொரோனாவிலும் கோடிக்கோடியாக கள்ளாக்கட்டியது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றன. இந்தியாவில் கார்ப்பரேட் முதலாளிகளில் ஒருவரான அதானி உலகின் இரண்டாவது பணக்காரராக வந்தமையும் இந்த கொரோனா காலத்தில்தான். இதுமட்டுமற்றி பல்வேறு கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை இலாபம் அடைந்துள்ளனர்.

மோடி தலைமையிலான காவி – கார்ப்பரேட் பாசிச அரசு, ஒருபுறம் இந்திய தரகு – கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் வாராகடன் தள்ளுபடி, சலூகைகள், மானியங்கள் என அளித்து அவர்களை கொழுக்கச் செய்கிறது. மறுபுறம் உழைக்கும் மக்கள் மீது மேன்மேலும் பொருளாதாரத் தாக்குதல்களையும், பாசிச அடக்குமுறைகளையும் தொடுத்து வருகிறது. அதன்விளைவாகவே கொரோனா காலத்தில் உலகளவில் ஏழைகளாக மாறிய 7 கோடி பேரில், இந்தியர்கள் 5.6 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க