22.10.2024

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய
இந்திய கடற்படையினரை கைது செய்து தண்டனை வழங்குக!

கண்டன அறிக்கை!

மிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இந்தியக் கடற்படையால் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகியுள்ளனர். இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் வீரகுமார் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடலில் படகினை நிறுத்தச் சொன்ன போது, நிறுத்தாமல் சென்றதால்தான் சுட்டதாக கடற்படை தெரிவிக்கிறது. ஒரு மீன்பிடி படகு நிற்காமல் சென்றால் அதனை சுட வேண்டும் என்பதுதான் இந்தியக் கடற்படையின் சட்டமா?

எவ்வித அடையாளமும் இல்லாததால் இலங்கை கடற்படையாக இருக்குமோ என்ற அச்சத்திலேயே  நிற்காமல் சென்றதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.  ஆனால் மீன்பிடித்து வாழ்க்கையை நடத்தும் மீனவர்கள் மீது சராமரியாக குண்டுமழை பொழிந்து உள்ள இந்திய கடற்படை வீரர்கள்,  மீனவர்கள் தங்களுடைய ஆதார் கார்டை காட்டிய பிறகும் அவர்களைக் கட்டி வைத்து சுமார் 2 மணி நேரம்  கடும் சித்திரவதை செய்துள்ளனர்.

தமிழ்நாட்டு மீனவர்களை துப்பாக்கியால் சுடுவதிலும் சித்திரவதை செய்வதிலும் இலங்கை ராணுவத்துக்கு சளைத்ததல்ல இந்திய கடற்படை என்பதை நிரூபித்திருக்கிறது. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கும் பன்னாட்டு கார்ப்பரேட் கப்பல்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்த முடியுமா? அல்லது இந்தியாவின் வேறு எந்த பகுதியிலாவது, வேறு எந்த மீனவர்கள் மீதாவது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறதா?

சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை போல தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் சித்திரவதை செய்த இந்திய கடற்படையினர் உடனே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க