ஆதார் எண் இணைக்கும் பணி ஆசிரியருக்கு தேவையா? | ஆசிரியர் உமா மகேஸ்வரி | வீடியோ

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் ஆசிரியர் தேவையா? என்பது பற்றியும் அதில் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் பற்றியும் அரசு பள்ளி ஆசிரியர் உமா மகேஸ்வரி கீழ்க்கண்ட காணொலியில் விளக்குகிறார்…

தார் கார்டை வாக்காளர் அடையாள அட்டையில் இணைக்கும் வேலையில் ஆசிரியர்கள் ஈடுபடுவது அவர்களுக்கு பெரும் பணிச்சுமையாக இருக்கிறது. தினமும் நான்கு வகுப்புகளுக்கு பாடம் எடுக்கவேண்டி இருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்கு முன் தயாரிப்பு செய்யமுடியாமல் போகிறது. மாலையில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் வேலைக்கு போகும்போது அங்கு இருக்கக்கூடிய மக்கள் வேலைக்கு போய்விடுவார்கள். மக்களின் பங்களா வீடுகள் முன்பு நின்று, வீட்டுல யாருங்க? நாங்க BLO வந்து இருக்கோம், கொஞ்சம் வெளியில வாங்க என்றும், ஒவ்வொரு வீட்டு கேட்டு [gate] முன்பும் நின்று குரல் கொடுத்தாலும் வீட்டு ஓனர்கள் எட்டிப் பார்ப்பதில்லை.

மாலை நான்கு மணியிலிருந்து ஏழு மணி வரை பகுதியில் வேலை செய்வோம். இப்படியாக இரவு ஒரு மணி வரை இந்த பணியை செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. இதற்கு மத்தியில் கற்பித்தல் பணிக்கான திட்டமிடுதல், வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். வார இறுதியில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் என்று கல்வித் துறையில் அறிவிப்புகள் வந்தாலும் அதற்கு முழுமையாக வழிகாட்டலும் இல்லை.

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் ஆசிரியர் தேவையா? என்பது பற்றியும் அதில் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் பற்றியும் அரசுப் பள்ளி ஆசிரியர் உமா மகேஸ்வரி கீழ்க்கண்ட காணொலியில் விளக்குகிறார்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க