தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி: பயங்கரவாத அமைப்புக்கு அடிப்படை உரிமை கொடுக்கக் கூடாது! | மருது வீடியோ

ஆர்.எஸ்.எஸ்-ன் பேரணிக்கு அனுமதி அளித்ததை கண்டித்தும், சங் பரிவார கும்பலின் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்து ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்....

வம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் அனுமதி அளித்துள்ளது போலீசு. தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு ஒரு நெருக்கடியை கொடுக்கிறதா?

ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பு பேரணி நடந்த உரிமை இருக்கிறதா என்று கேட்டால் உரிமை இல்லை என்று பொதுவாக கூறிவிடுவார்கள். ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு பயங்கரவாத அமைப்பு, அந்த அமைப்பிற்கு அடிப்படை உரிமைகளை பற்றி பேசமுடியாது.

எனவே ஒரு பயங்கரவாத அமைப்பிற்கு அடிப்படை உரிமைகளை காரணம் காட்டி அவர்களுக்கு இந்த அனுமதி கொடுத்தது என்பதே முதல் தவறு.

இதை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி ; அம்பானி – அதானி பாசிசம் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். இது தடைசெய்யப்பட வேண்டிய அமைப்பு. ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங் பரிவார கும்பலுக்கு எங்கேயும் அடிப்படை உரிமைகள் கொடுக்கப்படக்கூடாது என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.

துப்பாக்கியை எடுத்து கொண்டு அவர்கள் பேரணி நடத்துகிறார்கள். கத்தையை சுத்துக்கொண்டு பேரணி நடத்துகிறார்கள். இது ஒன்று போதும் இந்த கட்சியை – இந்த அமைப்பை – தடைசெய்வதற்கு!

தற்போது அண்ணாமலை, கோவை எரிவாயு உருளை வெடிப்பு பிரச்சினையில் போலீசு கண்ணில் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறார், எதுவுமே செய்யமுடியவில்லை. பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் இன்றைக்கு தமிழ்நாட்டை மிரட்டிக்கொண்டிருக்கிறது. அவர்கள் வெற்றிப்பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்-ன் பேரணிக்கு அனுமதி அளித்ததை கண்டித்தும், சங் பரிவார கும்பலின் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்து ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்….

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க