ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: ஒப்புதல் அளிக்காத ஆர்.என்.ரவியை வெளியேற்று! | மருது வீடியோ

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்து பல்வேறு கருத்துக்களை ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் மருது அவர்கள்!

மிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி,  பணத்தை இழந்ததால் 30-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டு செயலிகளை தடை செய்ய வேண்டும் என  பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதனால், தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்து அக்டோபர் 1-ம் தேதி அவசரச் சட்டம் கொண்டுவந்தது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு அவசர சட்டத்திற்கு மாற்றாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை அக்டோபர் 19-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதையடுத்து, இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

27 நாட்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்ட மசோதா பற்றி வாயை திறக்காத ஆளுநர் ரவி, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) கடிதம் அனுப்பினார். இதற்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது உள்ளிட்ட தமிழகத்தில் எதற்கும் உதவாத ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்து பல்வேறு கருத்துக்களை ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் மருது அவர்கள்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க