மதுரை மாட்டுத்தாவணி அருகில் ராமசுப்பு அரங்கத்தில், டிசம்பர் 21 பட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்தநாளன்று “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. ஆவணப்படம் உருவாக்கிய எழுச்சியில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள், “ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அம்பானி-அதானி பாசிச சக்திகள் எப்படி எல்லாம் மக்களையும், ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் ஒடுக்குகிறது என்பதை பற்றியும், இஸ்லாமியர்கள் தாக்கப்படும்போது நாம் என்ன செய்தோம் என அனைவரிடமும் கேள்வி எழுப்பினார்.
இனிமேல் நாம் இப்படி அமர்ந்து பேச முடியுமா? ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி சங் பரிவாரக் கும்பலுக்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கையும் எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து களத்தில் நிற்க வேண்டும்.
படிக்க : ஸ்டாலின் சகாப்தம் | ஆவணப்படம் – Documentary
அதை போன்ற ஒரு நிகழ்வுதான் சமீபத்தில் சென்னையில் நடந்தது. அம்பேத்கர் சிலைக்கு மாலைபோட வந்த அர்ஜுன் சம்பத் தலைமையிலான சங்கி கும்பலை விரட்டி அடித்தார்கள் ஜனநாயக சக்திகள். இதேபோல் மற்ற மாநிலங்களில் நடப்பதில்லை, ஆதலால் தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
இதேபோல் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி உள்ளிட்ட காவிக் கும்பலுக்கு எதிரான நடவடிக்கைகளை களத்தில் எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றியும், உலக பொருளாதார நெருக்கடியின் விளைவாக உலகம் முழுவதும் பாசிசம் தோன்றுகிறது. அது இந்தியாவிலும் காவி-கார்ப்பரேட் பாசிசமாக வளர்ந்துள்ளது என்பது பற்றியும், ஏன் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியம் என்பதைப் பற்றியும், “கோழைகளுக்கு வாழ்வில்லை; வீரர்களுக்கு சாவில்லை” என பேசி முடித்தார்.
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் தோழர் மருது அவர்கள் ஆற்றிய உரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!