தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வதா? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் | தோழர் மருது வீடியோ

ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்-இன் ஆளாகவே பேசிவருவது இது முதல்முறையல்ல. தொடர்ச்சியாக இவ்வாறு பேசிவரும் ஆர்.என்.ரவிக்கு இனி தமிழக மக்கள் மரியாதை கொடுக்கவேண்டுமா என எண்ணிப்பார்க்க வேண்டும்.

மிழ்நாட்டு மக்கள் வரிப்பணத்தில் வாழக்கூடிய ஆளுநர், ‘தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று மாற்றினால் பொருத்தமாக இருக்கும்’ என்று கூறுகிறார் என்றால் அவருக்கு எவ்வளவு தைரியம் திமிர் இருக்கும். தமிழ்நாடு என்பதை தமிழகம் என மாற்றினால் பொருத்தமாக இருக்கும் என்றால் ஆளுநரை எப்படி அழைத்தால் பொருத்தமாக இருக்கும்.

ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்-இன் ஆளாகவே பேசிவருவது இது முதல்முறையல்ல. தொடர்ச்சியாக இவ்வாறு பேசிவரும் ஆர்.என்.ரவிக்கு இனி தமிழக மக்கள் மரியாதை கொடுக்கவேண்டுமா என எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு மரபை உயர்த்தி பிடிக்கக் கூடிய நம்மை இழிவுபடுத்தும் இதுபோன்ற ஆர்.எஸ்.எஸ் கும்பல்களுக்கு இனி தமிழ்நாட்டில் இடமில்லை என்ற வகையில் தமிழக மக்கள் இவர்களை விரட்டியடிக்க வேண்டும்.

தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை, எல்.முருகன் போன்றவர்கள் ஆளநருக்கு ஆதரவாக பேசுவதில் வியப்பு ஏதும் இல்லை. பூலித்தேவன், கட்டபொம்மன், மருது சகோதரர்களுக்கு துரோகம் செய்தது யார்? சொந்த மக்களையே காட்டிக் கொடுக்கக்கூடிய துரோகிகள் வரலாறு நெடுகிலும் இருந்திருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு நாம் நிராகரிக்க வேண்டும்.

ஜனவரி மாதம் என்பது மொழிப்போர் தியாகிகளுக்கானது. அந்த வகையில் தியாகி சுந்தரலிங்கனார் அவர்களின் உயிர் தியாகத்தை உயர்த்தி பிடிப்போம்! இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் இன்றைய தேவையை அனைத்து பொதுமக்களிடம் கொண்டு செல்வோம்! அப்போதுதான், ஆரிய ரவியை மட்டுமல்ல, மோடி, அமித்ஷா உட்பட அதானி-அம்பானி பாசிச கும்பல் அனைவரையும் முறியடிக்க முடியும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை துட்சமாக மதிக்கும் ஆளுநர் ரவியை கண்டனம் செய்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள் பேசியிருக்கிறார்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க