01.02.2023

SRF சங்கத்தேர்தல்! மகத்தான வெற்றி!

பத்திரிகை செய்தி

ன்பார்ந்த தோழர்களே,

சென்னை மணலியில் உள்ள SRF ஆலையின் பொதுத்தொழிலாளர் சங்க தேர்தலில் பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பில் அனைத்து பதவிகளுக்கும் போட்டியிட்டோம்.

4 முனைப்போட்டி இருந்த களத்தில் பு.ஜ.தொ.மு – வை சீர்குலைத்த கும்பல் நம்மை பிரதான எதிரியாகச் சித்தரித்து பிரச்சாரம் மேற்கொண்டது. பிரச்சாரம் முடிவடைவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாக மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தோழர் பா.விஜயகுமார், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட தோழர் தேவராஜ் ஆகியோர் மீது வக்கிரமமான வார்த்தைகளில் தனிநபர் தாக்குதல் நடத்தினர். நாம் ஒரே ஒரு மணி நேரத்தில் அம்பலப்படுத்தும் அறிக்கை வெளியிட்டோம்.

நம்மைப் பொறுத்த வரை, அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் அதை அரசியல்ரீதியாகவே எதிர் கொண்டோம். போட்டியிட்ட ஏனைய 2 அணிகளும் நேர்மறை பிரச்சாரம் செய்தனர். ஆனால், சீர்குலைவுவாதிகள் தான் வக்கிரமான வார்த்தைகளில் தொழிலாளர்களது நெஞ்சில் நஞ்சை விதைக்க முயன்றனர்.

அவதூறுகள், வசவுகளைத் தாண்டி நமது அணி வேட்பாளர்கள் அனைவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளனர். குறிப்பாக தலைமைப் பதவிக்கு மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பில் போட்டியிட்ட தோழர் பா.விஜயகுமார் 64.5% ஓட்டுகள் வாங்கியுள்ளார். எஞ்சிய 35.5% ஓட்டுகளைத் தான் சீர்குலைவாதிகளும், ஏனைய இரண்டு வேட்பாளர்களும் தலா 10% -11.% அளவுக்கு பகிர்ந்து கொண்டனர். இது மகத்தான வெற்றி. இரண்டாவது ஆண்டாக இந்த பெருவெற்றி தொடர்ந்துள்ளது.

நமது தலைமை மீது நம்பிக்கை வைத்த தொழிலாளர்களுக்கு எமது புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
வடக்கு மண்டல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(இணைப்பு : பு.ஜ.தொ.மு – மாநில ஒருங்கிணைப்புக்குழு)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க