20.02.2023

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில்
மார்க்ஸ் லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு!

பாசிச ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம்!

கண்டன அறிக்கை!

டெல்லி ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில், ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் பாசிச குண்டர்கள் மாணவர் மன்றத்திலிருந்த மார்க்ஸ், லெனின் மற்றும் பெரியார், பூலே ஆகியோரின் படங்களை உடைத்திருக்கிறார்கள். மேலும் ‘இங்கு கம்யூனிசம் பேசக்கூடாது’ என்றும் ‘சாவர்க்கர்’ என்றும் எழுதி இருக்கிறார்கள். இதனை தட்டிக் கேட்ட தமிழ்நாட்டு மாணவர்களையும் தாக்கியிருக்கிறார்கள்.

ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். மாற்றுக் கருத்துக்களை, எதிர்ப்புக் கருத்துக்களை ஒழித்துக்கட்டுவதற்காகவே பாசிச ஏபிவிபி குண்டர்கள் மாணவர்களை தாக்கி வருகின்றனர்.

படிக்க : அசைவ உணவு சாப்பிட்ட ஜேஎன்யூ மாணவர்களை தாக்கிய ஏபிவிபி குண்டர்கள் !

சில தினங்களுக்கு முன்பு கேரள மாணவர்களை தாக்கிய பாசிச கும்பல், இப்போது இடதுசாரி கருத்துக்களை பேசக்கூடாது என்றும் மார்க்ஸ், லெனின், பெரியார், பூலே உள்ளிட்டோரின் படங்களை உடைத்தும் தமிழ்நாட்டு மாணவர்களை தாக்கியும் உள்ளது. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாட்டு மாணவர்களை தாக்கிய குண்டர்களை உடனே பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாசிச ஏ.பி.வி.பி அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

வழக்கம் போன்றதொரு கட்சியாக பாஜகவும், மாணவர் அமைப்பாக ஏ.பி.வி.பி.யும் எப்போதும் இருந்ததில்லை. அது ஒரு பாசிச கும்பல், ஜனநாயக மற்றும் முற்போக்கு புரட்சிகர கருத்துக்களை ஒழித்து கட்டுவதே அதன் முதல் வேலை. ஆகவே ஆர்.எஸ்.எஸ், பாஜக, ஏபிவிபி போன்ற பாசிச அமைப்புகளை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது
செய்தி தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க