அசைவ உணவு சாப்பிட்ட ஜேஎன்யூ மாணவர்களை தாக்கிய ஏபிவிபி குண்டர்கள் !

ஏபிவிபி குண்டர்கள் கைகளில் கட்டைகள், செங்கற்கள் மற்றும் தூய்மை செய்யும் பொருட்களை வைத்திருந்தனர். இரவு உணவிற்கு அசைவம் பரிமாற்றப்பட்டதைக் கண்ட அவர்கள் கோபமடைந்து மாணவர்களை தாக்க தொடங்கினர்.

0
வஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் அசைவ உணவு வழங்குவதை எதிர்த்து ஏபிவிபி வன்முறையில் ஈடுபட்டுள்ளது. அதில் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
ராம நவமியில் அசைவ உணவு வழங்கப்படுவதை எதிர்த்து வலதுசாரி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, ஏப்ரல் 10 ஞாயிறுகிழமை அன்று காவேரி விடுதியில் இந்தச் சம்பவம் நடந்தது. இதில் 6 மாணவர்கள் படுகாயம் அடைந்ததாக போலீசு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியது. ஒரு மாணவியின் நெற்றியில் இருந்து இரத்தம் வருவதையும், மற்றொருவர் முதுகில் காயங்களுடன் இருப்பதையும் பார்க்க முடிகிறது.
வளாகத்தில் உள்ள  அசைவ உணவு வழங்கப்படுவதைக் கண்ட ஏபிவிபி வன்முறையில் ஈடுபட்டதாகவும் மற்ற மாணவர்களைத் தாக்கியதாகவும் இடதுசாரி மாணவர்கள் கூறினார்கள்.
படிக்க :
♦ ஜே.என்.யு. துணைவேந்தராக மற்றுமொரு சங்கி – சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம் !
♦ JNU : இடதுசாரி மாணவர்களின் வெற்றி ! ஏபிவிபியின் ரவுடித்தனம் !
“ஏபிவிபி மாணவர்கள் காவேரி விடுதி அருகே நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது வழக்கமாக ஞாயிறுகிழமைகளில் விடுதிக்கு சமைக்க கோழிக்கறி எடுத்துவரும் வியாபாரியை தடுத்து நிறுத்தியுள்ளனர். ஹவன் நடந்தப்படுவதாகவும் அசைவ உணவு சமைக்கக் கூடாது என்றும் அந்த வியாபாரி மற்றும் மெஸ் செயலாளரை மிரட்டியுள்ளனர்” என்று ஜேஎன்யூ மாணவர் சங்கத்தின் கவுன்சிலர் அனகா பிரதீப் கூறினார்.
மாணவர்களால் நடத்தப்படும் காவேரி மெஸ் கமிட்டி, ஏபிவிபி உறுப்பினர்கள் அசைவ உணவை வழங்குவதைத் தடுக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாடியது. அந்த கமிட்டி, மாணவர்கள் பல்கலைக் கழக டீனுக்கு கடிதம் எழுதி, அந்த மாணவக்ரள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
அக்கடிதத்தில் “இன்று ஒரு குழுவினர் தன்னிச்சையாக மெஸ் மேலாளரிடம் அசைவ (கோழி) உணவை சமைக்க வேண்டாம் என்று விடுதி மற்றும் மெஸ் கமிட்டிக்கு தெரிவிக்காமல் மிரட்டியுள்ளனர். கோழிக்கறி வழங்க வந்த விற்பனையாளரை தகாத வார்த்தைகளால் மிரட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். காவேரி விடுதிக்கு வெளியில் இருந்து வந்த மாணவர்கள் விடுதிக் குழு உறுப்பினர்களைத் தாக்கியுள்ளனர். சூழ்நிலை மிகவும் பதட்டமாக மாறியுள்ளது. காவேரி விடுதியின் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இரவு உணவு மெனுவை உள்ளடக்கிய இயல்பு நிலையை உடனடியாக மீட்டெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இருப்பினும் பதற்றம் விரைவில் வன்முறையாக மாறியது. கற்கள் மற்றும் பூந்தொட்டிகளை வீசித் தாக்குதல் தொடுத்துள்ளனர் ஏபிவிபி குண்டர்கள். தாக்குதலில் காயமடைந்த SFI மாணவர் அமைப்பின் செயற்பாட்டாளர் ஹரேந்திர சேஷாமா “இரவு 7.30 மணியளவில் இரவு உணவு பரிமாறப்பட்டபோது வன்முறை தொடங்கியது. ஏபிவிபி குண்டர்கள் கைகளில் கட்டைகள், செங்கற்கள் மற்றும் தூய்மை செய்யும் பொருட்களை வைத்திருந்தனர். இரவு உணவிற்கு அசைவம் பரிமாற்றப்பட்டதைக் கண்ட அவர்கள் கோபமடைந்து மாணவர்களை தாக்க தொடங்கினர். நான் பலமுறை கட்டைகளால் தாக்கப்பட்டேன்” என்று அவர் குற்றம் சாட்டினார்.
எம்.ஏ சமூகவியல் மாணவியான அக்தரிஸ்தா அனசாரி நெற்றியில் காயம் ஏற்பட்டதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். “இரவு 8 மணியளவில் நிலைமை வன்முறையாகி ஏபிவிபியினர் கற்களை வீசியதால் அவள் நெற்றியில் காயம் ஏற்பட்டது. அங்கு மிகுந்த சலசலப்பு இருந்ததால் அவளைத் தாக்கியதை எங்களால் சரியாக பார்க்க முடியவில்லை. நாங்கள் அவளை உடனடியாக ஒரு ஆட்டோவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம்” என்று மாணவர் ருத்ராஷ் பைக்ரா கூறினார்.
ஏபிவிபி உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஏப்ரல் 10 அன்று இரவு வசந்த் குஞ்ச் போலீசு நிலையத்திற்கு வெளியே இடதுசாரி மாணவர்கள், காவேரி விடுதியில் அசைவ உணவு வழங்கியதற்காக மாணவர்களைத் தாக்கிய ஏபிவிபி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜேஎன்யு மாணவர் சங்கத்தினர் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இரவு நேர பேரணியில் பங்கெடுத்த JNUSU உறுப்பினர் அபேஷா பிரியதர்ஷினி 10 – 20 ஏபிவிபி மாணவர்கள், பெண் மாணவர்களை அவமானப்படுத்தப்பட்டதாகவும், சில மாணவர்கள் மீது சாதி ரீதியாக அவதூறு செய்தகாகவும் குற்றம் சாட்டினார்.
போராட்டத்தின் போது காயமடைந்ததாகக் கூறிய ஜேஎன்யு மாணவரும் AISA உறுப்பினருமான தனஞ்சாய் “நாங்கள் வளாகத்தில் ஒரு கலாச்சார நிகழ்ச்சியில் இருந்தபோது எனக்கு அழைப்புகள் வந்தன. காவேரி விடுதிக்கு விரைந்தேன். மெஸ் செயலாளர் மற்றும் காவலர்களை ஏபிவிபி மாணவர்கள் அடித்து உதைத்தனர். அப்போது எனது நண்பர்களை தாக்கினர். 7-9 பேர் கொண்ட குழு என்னைப் பிடித்தபோது நான் எனது நண்பர்களைப் பாதிகாக்க முயன்றேன். என் குர்தவைக் கிழித்து என்னைத் தள்ளினார்கள். மற்ற மாணவர்களில் ஒருவரான அக்தரிஸ்தா அன்சாரியின் தலையில் அடிப்பட்டது அவள் இரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தாள்” என்றார்.

படிக்க :

RTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் !

JNU – கம்யூனிசம் : புரட்சியா , தாராளவாதமா ?

கடந்த 2020-ம் ஆண்டு ஜேஎன்யூவில் ஆயுதங்களுடன் இறங்கிய குண்டர்படை பல மாணவர்களை சரமாரியாக தாக்கியது. தற்போது அசைவ உணவு சாப்பிட்டதற்கான தக்குதல் தொடுத்துள்ளது. இருப்பினும் இந்த இரண்டு வன்முறைகளிலும் போலீசு இன்னும் யாரும் கைது செய்யவில்லை.
ஜே.என்.யூ பல்கலைக் கழகத்திற்குள் என்ன உணவு சமைக்க வேண்டும்; என்ன சமைக்கக் கூடாது என்று கட்டளையிட்டு மிரட்டி தாக்குதலில் ஈடுபடுகிறது பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி. ஆர்.எஸ்.எஸ் – பாஜக காவி குண்டர்களின் இந்த வெறியாட்டத்தை தடுத்து நிறுத்த ஜேஎன்யூ மாணவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவது நம் அனைவரின் கடமையாகும்.
சந்துரு
செய்தி ஆதாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்1, இந்தியன் எக்ஸ்பிரஸ்2

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க