விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தை இழுத்து மூடு! | தோழர் அமிர்தா வீடியோ

விழுப்புரத்தில் இருக்கும் அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும். ஜூபின் பேபி உள்ளிட்ட குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என மக்கள் அதிகாரம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

ஏடிஎம் கொள்ளையர்களை ஹரியானா வரை சென்று இரண்டு நாட்களில் கைது செய்து வரும் காவல்துறைக்கு 15 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடப்பதை பற்றி தெரியாதா?

இதற்கு பொறுப்பான கலெக்டர் தாசில்தார் விஏஓ உட்பட அனைத்து அரசு அதிகாரிகளும் பதில் சொல்லியாக வேண்டும். வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வேங்கைவயல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளியாக்க நிர்பந்தித்தது தான் இந்த சிபி-சிஐடி. இந்த அரசு கட்டமைப்பு எப்பொழுதுமே ஆளும் வர்க்கத்திற்கு சார்பாக தான் இருந்திருக்கிறது; பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவற்றவர்களுக்கு சார்பாக ஒரு போதும் இருந்ததில்லை.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க