ஆர்.எஸ்.எஸ் உளவாளி ஆர்.என்.ரவியின் உளறல்கள் – பின்னணி என்ன? | தோழர் ஆ.கா.சிவா வீடியோ

ஆர்.எஸ்.எஸ்-இன் உளவாளியும் ஆளுநர் என்ற பெயரில் உலவி கொண்டிருக்கும் ரவி ஒரு பாசிச கருத்தை பேசியிருக்கிறார். இந்த வெறுப்பு கருத்துக்கு பதில் அளிப்பதற்கு முன்னால் சிலவற்றை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பாக ‘தமிழகம்’ என்று கூறியது, சட்டமன்றத்தில் திமிர்தனமாக நடந்து கொண்டது, தமிழகத்தில் தான் சனாதனம் செழித்து ஓங்கி வளர்ந்தது என்பன போன்ற கருத்துக்களை கூறி அதற்கு தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து செருப்படிக்கு ஒப்பான பதில்களை ஆர்எஸ்எஸ் உளவாளி ரவி பெற்றுக்கொண்டார். ஜனநாயக சக்திகளும் மாணவர்களும் போராடியதால் பதுங்கிக் கொண்டார்.

தற்போது, மேற்கத்திய தத்துவங்கள் இந்தியாவிற்கு ஒவ்வாதது, காரல் மார்க்ஸின் கருத்துகள் இந்தியாவை சிதைத்து விட்டது என்று உளறிக் கொண்டிருக்கிறார். இந்தியாவிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி பார்ப்பனியமானது ஒரு கொடுங்கன்மையை மக்களின் மீது ஏவி விட்டிருக்கிறது. சொந்த நாட்டு மக்கள் மீது அது செய்துவரும் அடக்குமுறைகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க