ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்! | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை

தேர்தல் என்றும் ஜனநாயகம் என்றும் பெருமை பீற்றிக் கொண்டிருக்கும் இந்திய ஜனநாயகம் புழுத்து நாறிக் கொண்டிருக்கிறது.

24.03.2023

ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்!
மோடி, அமித்ஷா பாசிச கும்பலின் வெறியாட்டம்!

கண்டன அறிக்கை

பொய்யாக புனையப்பட்ட அவதூறு வழக்கில் நேற்றைய தினம்(23.03.2023) ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். அந்த தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு ஒரு மாத காலம் நீதிமன்றமே அவகாசம் வழங்கி இருக்கிறது.

இன்றைய தினம் திடீரென்று ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்திருக்கிறது மோடி – அமித்ஷா பாசிச கும்பல்.

இந்த பாசிச கும்பல் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை எப்படி நடத்தும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்திருப்பதன் மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டுவது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைய விடாமல் செய்வது,  எதிர்க்கட்சிகளை பழி வாங்குவது என்று ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்திருக்கிறது பாசிச பாஜக.

படிக்க : பொய் வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை! சேத்தன் குமார் கைது! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

மோடிக்கு எதிராக கருத்து கூறுவோரை தகுதி நீக்கம் செய்து, தேர்தலில் போட்டியிட தடுத்து எதிர்க்கட்சிகள் யாருமே இல்லை என்ற நிலையை உருவாக்கி அதன் மூலம் 2024 தேர்தலில் வெற்றி பெறுவதும், இந்து ராஷ்டிரத்தை படைப்பதுமே ஆர்.எஸ்.எஸ்-  பாஜக பாசக்கும்பலின் நோக்கம்.

இது ஒரு பாசிச நடவடிக்கையாகும். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கே இந்த நிலை என்றால் மற்ற எம்.எல்.ஏ, எம்.பி.களின் கதி என்னவாக இருக்கும்?

தேர்தல் என்றும் ஜனநாயகம் என்றும் பெருமை பீற்றிக் கொண்டிருக்கும் இந்திய ஜனநாயகம் புழுத்து நாறிக் கொண்டிருக்கிறது.

தேர்தல் முறைக்கு அப்பாலும் கூட ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி அதானி பாசிசக் கும்பல் வீழ்த்தப்பட வேண்டும். இந்த நோக்கத்துக்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க