சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! மே 1 மாநாட்டை முன்னிட்டு மதுரை கோ.புதூர் மெயின் பஜாரில் ஏப்ரல் 20 அன்று மாலை 6:30 மணி அளவில் மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னனி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி, மக்கள் கலை இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மாநாட்டின் நோக்கத்தை விளக்கி ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் தோழர்கள் பங்கேற்புடன் கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்தேச குடியரசு இயக்கத்தின் தோழர் மெய்யப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் சரவணன், மக்கள் அதிகாரத்தின் தோழர் சிவகாமு ஆகியோர் மக்கள் முன்னிலையில் பாசிசத்தை எதிர்க்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தி உரையாற்றினர்.
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு- புதுவை.
9791653200, 9444836642 7397404242, 9962366321
