சென்னை – மதுரை மே தின பேரணி – ஆர்ப்பாட்டம் || 138வது மே தினம்

சென்னை – மதுரை மாவட்டங்களில் 138-வது மே நாள் கண்டன ஆர்ப்பாட்டம் - பேரணி நடைபெற்றது.

“சுற்றி வளைக்குது பாசிசப் படை! வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரைசை கட்டியமைப்போம்!” என்ற தலைப்பின் கீழ்  மே தின பேரணி ஆர்ப்பாட்டம்  ஆவடியில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி வடக்கு மண்டலம் சார்பாக நடத்தப்பட்டது. மாலை 5 மணி அளவில் பேரணி தொடங்கியது. பறை இசையுடன் தொடங்கியது பேரணி,  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்  ஆ.கா சிவா தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கி  வடக்கு மண்டல செயலாளர் தோழர் மா சரவணன் அவர்கள் உரையை தொடங்கினார், அடுத்ததாக மக்கள் அதிகாரம் தோழர் அமிர்தா அவர்கள் இன்றைய சூழலில் பாசிசம் மக்களை எப்படி பாதிக்கின்றது என்று விளக்கிப் பேசினார்.

தொடர்ந்து புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர்  தோழர் துணைவேந்தன் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள்  தங்களுடைய சமுதாய பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும்  என்பதை விளக்கிப் பேசினார்.

அடுத்ததாக புதிய  ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி முன்னாள் மாநில பொருளாளர் தோழர் பா விஜயகுமார் தனது உரையில் தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகள் அனைத்தும் இன்று இழந்து வருகிறோம், அதை மீட்டெடுக்க தொழிலாளர் வர்க்கமாக ஓரணியில் திரள வேண்டும் என்று தனது உரையை நிறைவு செய்தார். இடையிடையே விண்ணதிர முழக்கங்கள் முழங்கப்பட்டன. இறுதியாக  வடகு மண்டல பொருளாளர் தோழர் ப.சக்தி வேல் நன்றியுரை ஆற்றினார். கூட்டத்தில் சுமார் 100 பேர் வரை கலந்து கொண்டனர்.

தகவல்
வடக்கு மண்டல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

***

”ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக; சுற்றி வளைக்குது பாசிசப் படை! வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!” என்ற தலைப்பில் ம.க.இ.க – பு.மா.இ.மு – மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம் சார்பாக உசிலம்பட்டியில் மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தகவல்
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க