வெற்றிகரமாக நடந்து முடிந்த மே 15 வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! மாநாடு | செய்தி – படங்கள்

அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக சிறப்பாக நடைபெற்றது.

மே 15: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற போர் முழக்க மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

சிறப்பு பேச்சாளர்கள் வருவது காலதாமதம் ஆனதால் மாநாடு சரியாக மாலை 5.30 மணிக்கு  துவங்கியது. தோழர் குருசாமி இணைச் செயலாளர் மக்கள் அதிகாரம் அவர்கள் கூட்டத் தலைமையை முன்மொழிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் வழிமொழிய புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர் ரவி தலைமையேற்றார்.

அதைத் தொடர்ந்து புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் தலைமையில் மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய தோழமை அமைப்புகளின் தோழர்கள் ஒன்றிணைந்து முழக்கம் எழுப்பினர்; மாநாட்டிற்கு வருகை தந்திருந்த திரளான மக்களும் முழக்கங்களை எழுப்பினர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சிவப்பு அலை கலைக்குழு தோழர்கள் வீரவணக்க பாடலை பாடி தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினர். அதை ஒட்டு மொத்த தோழர்களும் மக்களும் பின்தொடர்ந்தனர்.

மிகுந்த உற்சாகத்துடனும் கம்பீரமான மேடை – ஒலி, ஒளி அமைப்புடன் மாநாடு துவங்கியது.

மக்கள் அதிகாரம் சென்னை மண்டல இணைச் செயலாளர் தோழர் புவன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதில், இந்த மாநாடு எவ்வளவு இடையூறுகளுக்கும் சிரமங்களுக்கும் மத்தியிலும் நடக்கிறது என்பதை பேசி முன்னிலையில் வந்து அமரக்கூடிய பல்வேறு ஜனநாயக சக்திகளையும் மேடைக்கு வரவேற்றார். அடுத்ததாக வரவேற்புரையில் பேசும்போது நம்மை பயமுறுத்த நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை நாம் துணிவுடன் முறியடிக்க வேண்டும் என்பதையும், பாசிச கும்பல் எவ்வளவு கேடுகெட்ட பிற்போக்கானது என்பதையும் விளக்கினார். உதாரணமாக மோடியின் பக்கத்து வீட்டில் விபச்சாரம் நடக்கும்போது அதை கண்டும் காணாமல் இருந்தவர் நாட்டு மக்கள் பிரச்சனைய வா தீர்க்க போகிறார் என பாசிஸ்டுகளை அம்பலப்படுத்தினார்.

அடுத்ததாக தலைமை உரையாற்றிய புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர் ரவி பேசும்போது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் எப்படி இந்த மாநாட்டின் தலைப்பை பார்த்து பயந்தது. இந்த மாநாட்டை நடத்த விடாமல் தடுப்பதற்கு என்னென்ன வேலை எல்லாம் செய்தது. குறிப்பாக, போலீசை பயன்படுத்தி சுவர் விளம்பரங்களை அழித்தது, வழக்கு போட்டது போன்றவற்றை அம்பலப்படுத்தினார். நீதிமன்றத்திலும் சங்கிக் கும்பல் ஏற்படுத்திய தடையைப் பற்றியும் அம்பலப்படுத்தினார். மேலும், பாசிஸ்டுகள் எப்படி நம்மை பயமுறுத்த நினைக்கிறார்கள் அவர்கள் ஏவும் பல்வேறு ஒடுக்குமுறைகளை பற்றியும் பேசி அஞ்சாமல், நாம் விடுதலைப் போராட்ட வீர மரபையும் பார்ப்பனிய எதிர்ப்பு மரபையும் உயர்த்திப் பிடிக்க வேண்டி பேசி தலைமை உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சிவப்பு அலை கலைக்குழுவின் இரண்டு புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டன. தோழர்களின் பாடல்களும் நடனங்களும் வந்திருந்த அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அடுத்ததாக, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் முகமது கௌஸ் அவர்கள் பேசும்போது, வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற முழக்கம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல அது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொருத்தமானது என்றவர். வீழாது இந்தியா என்று முழங்கினார். அந்த வகையில் கர்நாடக தேர்தல் பாஜகவிற்கு ஒரு பெரிய அடி என்பதையும் பதிவு செய்தார். திரிசூல் என்பதில் உள்ள மூன்று முனைகளும் ஒன்று இஸ்லாமியர்களை குத்துவதற்கு மற்றொன்று கிறிஸ்தவர்களை குத்துவதற்கு மூன்றாவது ஜனநாயக சக்திகளை குத்துவதற்கு என சாதாரண மக்களின் மத நம்பிக்கையை இப்படி ஒரு வெறுப்பு பிரச்சாரமாக மாற்றுகிறார்கள் என்பதை பதிவு செய்தார்.  பாசிசத்திற்கு எதிரான நடவடிக்கையில் எப்போதும் துணை நிற்போம் என பேசி முடித்தார்.

அடுத்ததாக மக்கள் அதிகாரத்தின் மதுரை மண்டலப் பொருளாளர் தோழர் சிவகாமு அவர்கள் கள அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில், முன்பெல்லாம் தேர்தல் புறக்கணிப்பு பொதுக்கூட்டங்கள் நடத்தும் போது நாம் அனுமதி கேட்டால் கொடுத்து விடுவார்கள். ஆனால், தற்போது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! என்று நாம் பேசினாலே அனுமதி தர பதறுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு நிலைமை வந்துள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இது பாசிசம் வளர்வதற்கான அறிகுறி என்பதை பேசி மக்களின் பல்வேறு பிரச்சினைகளையும் அதை தீர்க்க வக்கற்ற மோடி அரசையும் அம்பலப்படுத்தினார். முஸ்லீம் மக்களை நம்பியாராக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் திட்டத்திற்கு தமிழ்நாடு வீழாது என பேசி முடித்தார்.

அடுத்ததாக பேசிய தமிழ் புலிகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் பேரறிவாளன் அவர்கள் குறிப்பிடும் போது, துவளாது போராடியதன் விளைவு தான் இந்த மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டின் டிஜிபி சைலேந்திரபாபு பாதுகாப்பு வழங்குகிறார். இதுதான் ஆர்.எஸ்.எஸ் சிந்தனை. எப்படி அரசுக் கட்டமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிந்தனை ஊடுருவி உள்ளது என்பதை அம்பலப்படுத்தினார். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் ஒரு பிரிவாக சீமான் எப்படி செயல்படுகிறார் என்பதை அம்பலப்படுத்தினார். குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ஒவ்வொரு பகுதியிலும் எந்த சாதி தலைவரை, யாரை முன்வைத்து பேச வேண்டும் என திட்டம் தீட்டுகிறதோ அதேபோலவே சீமானும் வேலை செய்கிறார் என்பதை அம்பலப்படுத்தினார். அதானிக்காக நாடாளுமன்றத்தை ஆளுங்கட்சியே முடக்கும் மிகப்பெரிய பாசிசத்தை அரங்கேற்றினார்கள் என குறிப்பிட்ட அவர் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் சித்தாந்த அடித்தளத்தை வேரோடு ஒழித்துக்கட்ட வேண்டும். அதற்கு ஊக்கப்படுத்தும் விதமாகத்தான் இந்த மாநாடு அமைந்துள்ளது என பேசி முடித்தார்.

சிவப்பு அலை கலைக்குழுவின் சங்கீங்க பாடல் பாடப்பட்டது.

இதைத் தொடர்ந்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உரையாற்றும்போது, பாசிசத்தை வீழ்த்த கம்யூனிஸ்டுகள் தான் சரியான நுணுக்கத்தை கையாண்டார்கள். அதை செய்து காட்டியவர் ஸ்டாலின். ஹிட்லரை ஓட ஓட விட்டு விரட்டியவர் ஸ்டாலின். அந்த ஹிட்லரின் நாஜிப்படையின் எச்சம்தான் இந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பல். பாசிச கட்சி என்றால் ரவுடிகள் பொறுக்கிகள் பித்தலாட்டக்காரர்கள் அயோக்கியர்கள் அனைவரையும் சேர்த்து கட்சியாக அமைத்தால் அதுதான் பாசிச கட்சி என எளிமையாக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 50 இடங்களில் ஊர்வலம் நடத்தினார்கள் அதன் கோரிக்கை என்ன? மக்களுக்காக ஏதாவது கோரிக்கை வைத்துள்ளார்களா மக்களின் பிரச்சினைக்காக ஏதாவது கோரிக்கை வைத்துள்ளார்களா? எதுவும் இல்லை என்றால் இவர்களின் நோக்கம் என்ன என கேள்வி எழுப்பினார். அது அனைவரையும் சிந்திக்க வைத்தது. அதற்கு தோழரே பதில் கூறும்போது, கலவரம் நடத்துவதற்காக மட்டும்தான் இந்த பயங்கரவாத படை இவ்வளவு இடங்களில் பேரணி நடத்தியும் இவர்களின் பெயர் யாருக்காவது தெரியுமா என கேள்வி எழுப்பினார். அவர்களுக்கு ஏன் இந்த அரசு நெருக்கடி கொடுக்கவில்லை என்பதையும் கேள்வியாக எழுப்பினார். இந்துத்துவ மரபும் தமிழ்நாட்டின் மரபும் நேர் எதிரானது என குறிப்பிட்ட அவர் கீழடி சொல்லும் மரபு தான் தமிழ் மரபு. அது சாதி மதங்கள் அற்றது. அது இந்துத்துவ மரபிற்கு எதிரானது. தமிழர்களை இழிவுபடுத்தும் மரபுதான் இந்துத்துவ மரபு எனக் குறிப்பிட்டு தமிழ் மரபு சார்ந்த பல்வேறு விஷயங்களை எளிமையாக குறிப்பிட்டார். அம்பானி அதானியின் சொத்து மதிப்புகள் உயர்வதைப் பற்றி குறிப்பிட்டு அம்பலப்படுத்தினார். காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.

ஆர்.எஸ்.எஸ் கும்பலால் பா.ஜ.க.வை விட்டுவிட்டு இன்னொரு கட்சியை கூட உருவாக்க முடியும் அதனால் இந்த ஆர்.எஸ்.எஸ்-ஐ ஒழித்து கட்டுவது பிரதானமானது என்பதைப் பேசினார். மக்கள் மத்தியில் நாம் ஒருங்கிணைந்து கூட்டமைப்புகளை கட்ட வேண்டும். அப்படிப்பட்ட படைதான் பாசிசத்தை வீழ்த்தும் என்பதை அழுத்தமாக பதிவு செய்து தனது பேச்சை முடித்தார்.

அடுத்ததாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தோழர் விஜயன் பேசும்போது, வன்னியர் சங்கம் மூலமாக எப்படி சாதிப் பெருமை பேசினார்கள் இன்றைக்கு அதே சாதிப் பெருமை பேசிய கட்டமைப்பை இந்துத்துவ கும்பல் எப்படி அபகரித்துக் கொண்டது, இதன் மூலமாக ஒரு வன்முறை கும்பலை வளர்த்து வருகிறார்கள், இதை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதை பல்வேறு உதாரணங்களை குறிப்பிட்டு அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக சிவப்பு அலை கலைக்குழுவின் அனைவராலும் வரவேற்கப்பட்ட சுற்றி வளைக்குது பாசிசப்படை பாடல் பாடப்பட்டது.

அடுத்ததாக வந்திருந்த சிறப்பு பேச்சாளர்கள் அனைவருக்கும் மக்கள் அதிகாரத்தின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் நினைவு பரிசு வழங்கினார்.

இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி என்பது தனித்தனியானது அல்ல அனைவரும் ஒன்று சேர்ந்த கூட்டு களவாணிகள். இவர்கள்தான் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொண்டு ஒட்டுமொத்த தேசத்தையும் சுரண்டுகிறார்கள். மக்களை சாதி, மத ரீதியாக பிரிக்கிறார்கள். இந்தப் பிரிவினையை மிகவும் பலப்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் பாசிசம் என்பது சனாதனமாக இருக்கிறது. ஜனநாயகத்தின் எதிர்சொல் பாசிசம். இந்தியாவில் இந்துத்துவா எதிர்ப்பு இரண்டாயிரம் ஆண்டுகளாகவே இருக்கிறது என்பதை குறிப்பிட்டு அதன் வரலாறுகளை குறிப்பிட்டார். வள்ளுவர் சித்தர்கள் அனைவரும் உயர்த்திப்பிடித்த சமத்துவ மரபை பதிவு செய்தார். இதன் வழித்தோன்றல்கள் தான் பெரியாரும் அம்பேத்கரும் அவர்கள் பார்ப்பன எதிர்ப்பு மரபை மிக அதிகமாக உயர்த்திப் பிடித்து நின்றார்கள் என்பதை விரிவாக பேசினார். மதம் அரசுடன் இருக்கக் கூடாது அது தான் மதசார்பற்ற அரசு என்பதை பதிவு செய்தார். இந்துத்துவா என்பது அது ஒரு அரசு வடிவம், அது அனைத்து ஜனநாயகத்திற்கும் எதிரானது ஆகவே அவர்களை வீழ்த்த வேண்டும் என்பதை பேசி முடித்தார்.

இறுதியாக, பேசிய மக்கள் அதிகாரத்தின் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் பேசும்போது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் நம் அனைவரையும் ஒன்றாக தான் பார்க்கிறான். நம்மிடம் ஒற்றுமைக்கான கூறுகள் உள்ளது. அதைக் கொண்டு பாசிச கும்பலை வீழ்த்த வேண்டும் என்பதையும் அரசுக் கட்டமைப்பில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை எப்படி வீழ்த்துவது? என கேள்வி எழுப்பி மக்கள் படைகளைக் கட்ட வேண்டும் அதற்கான கோரிக்கைகளை எழுப்ப வேண்டும் அந்தக் கோரிக்கைகள் அனைத்தும் இங்குள்ள அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்றுதான் என்பதை விரிவாக பேசி இரட்டை ஆட்சி முறை ஒலித்துக்கட்டி இந்த அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள பாசிசம் வளர்வதற்கான ஓட்டைகள் அனைத்தையும் அடைக்கும் விதமாக நாம் ஒரு புதிய அமைப்பினை நிறுவ மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும். அந்த மக்கள் எழுச்சியின் வழியில் பாசிசத்தை வீழ்த்துவோம். அதற்கு நாம் பார்ப்பனிய எதிர்ப்பு மரபையும் விடுதலைப் போராட்ட மரபையும் கீழடி போன்ற தமிழ் மரபுகளையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்து தனது உரையை நிறைவு செய்தார்.

மக்கள் அதிகாரத்தின் தோழர் திலகவதி அவர்கள் நேரம் கருதி தீர்மானத்தின் முதல் மற்றும் கடைசி கோரிக்கைகளை கம்பீரக்குரலில் வாசித்தார். அது அனைவராலும் கரவொலி எழுப்பி வரவேற்கப்பட்டது.

அடுத்ததாக முன்னிலையில் அமர்ந்திருந்த மாவட்ட நிர்வாகிகள் ஜனநாயக சக்திகளுக்கு மாநாட்டின் நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது.

இறுதியாக, நன்றியுரை ஆற்றிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் அவர்கள் மாநாடு இவ்வளவு நெருக்கடியின் போதும் அதற்கு ஒத்துழைப்பு தந்த ஜனநாயக சக்திகள் நண்பர்கள் உழைத்த தோழர்கள் சிறப்பாக ஒலி ஒளியை அமைக்க உழைத்த தொழிலாளர்கள் தோழர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி முடித்தார்.

பாட்டாளி வர்க்க சர்வதேச கீதம் அனைத்து தோழர்களலாலும்  பாடப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது. அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக மாநாடு இருந்தது.

பாசிசத்திற்கு எதிரான பார்ப்பனிய எதிர்ப்பு மரபையும் விடுதலைப் போராட்ட வீர மரபையும் உயர்த்திப் பிடிப்போம் வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்பு குழு),
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க