08.06.2023
விழுப்புரம் – மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை பூட்டாதே!
தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டு!
தமிழ்நாடு அரசே!
தடுக்கும் ஆதிக்க சாதி வெறியர்களை கைது செய்! ஊருக்குள் நுழைய விடாதே!
தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோயில்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டு!
பத்திரிகை செய்தி
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அடுத்த தர்மராஜா திரவுபதி அம்மன் கோயில் 1978 ஆம் ஆண்டு முதல் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயிலுக்கான வரியை தாழ்த்தப்பட்ட மக்கள் உட்பட அனைத்து சாதியினரிடமும் வசூலிக்கிறது ஆதிக்க சாதியினரிடம் கட்டுப்பாட்டில் உள்ள ஊர் நிர்வாகம்.
இந்தக் கோயில் தங்களுக்கு சொந்தம் என்று வன்னியர் சாதியினர் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், இந்தக் கோயில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.அதற்குப் பிறகும் தாழ்த்தப்பட்ட மக்கள் திரௌபதி அம்மன் கோயில் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
படிக்க : மாநாட்டுத் தீர்மானங்கள் | அச்சுப் பிரதி
கடந்த ஏப்ரல் ஏழாம் தேதி திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவின்போது கூட்ட நெரிசல் காரணமாக தவறுதலாக தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இருவர் கோயிலுக்குள் சென்று விட்டனர் .இதனைக் காரணமாக வைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஆம்புலென்ஸில் ஏறிய போதும் , ஆம்புலன்ஸ் செல்ல விடாமல் ஆம்புலன்ஸ் – இன்உள்ளே புகுந்து அந்த மக்களை ஆதிக்க சாதி வெறியர்கள் தாக்கினர்.
தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கிய ஆதிக்க சாதி வெறியர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
இதன் தொடர்ச்சியாகவே தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய வழிபாட்டு உரிமையை இன்று வரை ஆதிக்க சாதி வெறியர்கள் மறுக்கின்றனர் .இப் பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்படாததால் விழுப்புரம் மாவட்டம் நிர்வாகமானது தர்மராஜா திரௌபதி கோயிலுக்கு சீல் வைத்துள்ளது.
கோயிலுக்கு சீல் வைப்பதன் மூலம் இப் பிரச்சனையை ஒருபோதும் தீர்க்க முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களின் கோயில் வழிபாட்டு உரிமையை தமிழ்நாடு அரசு முன் நின்று நடத்த வேண்டும் என்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கக்கூடிய ஆதிக்க சாதி வெறியர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் ஊருக்கு நுழைவும் தடை விதிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் இதேபோன்று தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கக்கூடிய அனைத்து கோயில்களும் உடனே கணக்கெடுக்கப்பட வேண்டும். அந்தக் கோயில்களில் தமிழ்நாடு அரசே தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை முன்நின்று நடத்த வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321