29.06.2023
செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர்!
ஆளுநர் மாளிகையைப் பூட்டு!
R.N.ரவியை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடி!
பத்திரிகை செய்தி
ஆர். என் .ரவி தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்திருக்கிறார்.கேரளாவின் கவர்னராக இருக்கக்கூடிய முகமது ஆரிப் கான் இதேபோன்று மாநில அமைச்சரவையின் கருத்து கேட்காமல் ஒரு அமைச்சரை நீக்கியதை எதிர்த்து கேரள அரசு கொடுத்த வழக்கில், ஆளுநர் தவறு நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.
மாநில அரசின் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர் என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வழியாக நாம் அறிய முடியும். இந்திய அரசியலமைப்பை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று செயல்படக்கூடிய ஆர்எஸ்எஸ் பாஜக பாசிச கும்பலின் உளவாளியான ரவி, அரசியல் சாசன எந்திரம் பழுதாகிவிடும் என்று கூறுவது நகைக்கத் தக்கது.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அரசின் உறுப்புகள் அனைத்தும் பாசிச மயமாகிக் கொண்டிருக்கிற இந்தச் சூழலில் பாசிச கும்பலின் நடவடிக்கைகளை மக்கள் திரள் போராட்டங்கள் இன்றி ஒருபோதும் எதிர் கொள்ள முடியாது.
படிக்க: செந்தில் பாலாஜி கைது! – மக்கள் அதிகாரம் கண்டனம்
தமிழ்நாட்டுக்கு எதிராகவும் தமிழுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்படக்கூடிய இந்த ஆளுநர் ஆர் என் ரவியை இனியும் தமிழ்நாட்டில் வைத்திருக்கக் கூடாது.
ஆளுநர் மாளிகையை விட்டு ரவியை உடனடியாக வெளியேற்றக் கூடிய வேலைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்வது தமிழ்நாடு அரசின் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு எதிரான அரசியல் போராட்டத்தை தமிழ்நாடு முன்னெடுக்க வேண்டும்.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321