ஜெகதீஸ்வரனை மீண்டும் கொல்லும் ஊடகங்கள் !

விகடன் பத்திரிகையோ, "நீட் தோல்வி; தொடரும் தற்கொலைகள்... தனிமனித உளவியல் மட்டுமே காரணமா?" என்ற தலைப்பில் தற்கொலைகான காரணத்தை  மறைத்து ஒட்டு மொத்த சமூகத்தையே குற்றவாளியாக்குகிறது.

ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் 2 ஆண்டுகளாக கடுமையான படித்து நீட் தேர்வில் 424 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்று உள்ளார். ஆனால் நீட் தேர்வின் கட்ஆப் மதிப்பெண்ணோ 117.

நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தபோதும் மருத்துவக் கல்லூரியில் இம்மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைக்கவில்லை. நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாலும் தனியார் கல்லூரியில் பணம் இருந்தால் படிக்கலாம். தனியார் கல்லூரியிலோ ஆண்டிற்கு ரூ.25 இலட்சம் செலவாகும். குடும்பமோ பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருப்பதால் அவர் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை. ஜெகதீஸ்வரனுடைய நண்பர் 160 மதிப்பெண் எடுத்துள்ளார். தனியார் கல்லூரியில் ஆண்டிற்கு ரூ.25 இலட்சம் பணம் கொடுத்து ‘பேமென்ட் கோட்டாவில்’ சேர்ந்து உள்ளார். இவருடன் படித்த சில நண்பர்களும் பேமெண்ட் கோட்டாவில் சேர்ந்து உள்ளனர்‌.

மருத்துவ படிப்பே தன் கனவு, அதனை அடைய முடியாதால் மன உளைச்சலில் அடைந்து வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் ஜெகதீஸ்வரன். மகனின் பிரிவால் மனமுடைந்த தந்தையும் அடுத்த நாளே தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விசயத்தை பெரும்பான்மையான ஊடகங்கள் நீட் தேர்வில் ஜெகதீஸ்வரன் தேர்ச்சி பெற்றதையே மறைத்துவிட்டு அவர் நீட் தேர்வில் தேர்விஅடைந்துவிட்டதால் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியிருக்கின்றன.

விகடன் பத்திரிகையோ, “நீட் தோல்வி; தொடரும் தற்கொலைகள்… தனிமனித உளவியல் மட்டுமே காரணமா?” என்ற தலைப்பில் தற்கொலைகான காரணத்தை  மறைத்து ஒட்டு மொத்த சமூகத்தையே குற்றவாளியாக்குகிறது.

ஜெகதீஸ்வரன் நண்பர் ஃபயாஸ்தின் ஊடகங்களில் சொல்லும்போது, நீட் தேர்வை வைத்து கார்ப்பரேட் கோச்சிங் சென்டர்கள் எப்படி கொள்ளை அடிக்கின்றன என்பது மட்டுமில்லாமல், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் டாக்டர் ஆகலாம் என்று தன்னை ஒப்பிட்டு அம்பலப்படுத்தியுள்ளார்.

நீட் தேர்வால் பறிகொடுத்த தன் நண்பனின் உயிரே கடைசியாக இருக்கட்டும் என்று ஃபயாஸ்தின் குரல் கொடுத்து வருகிறார். அவர் குரல் கொடுத்தும் பெரும்பான்மை ஊடகங்கள் தன் நிலை மாற்றி கொள்ளவில்லை. ஊடகங்கள் கொலை செய்தவனுக்கு ஆதரவாக இருக்கின்றன. ஏனெனில் ஊடகங்கள் கார்ப்பரேட் முதலாளிகள் பக்கம் இருக்கின்றார்கள்.

செல்வம்
நெல்லை மண்டலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
9385353605

ஆதாரம் கீழ் …

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க