அக்டோபர் 20-ஆம் தேதியன்று தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் (Khan Yunis) இஸ்ரேலின் குண்டுவீச்சில் “ஆக்சிஜன் இஸ் நாட் ஃபார் தி டெட்” (Oxygen is Not for the Dead) என்ற நாவலின் ஆசிரியரும் கவிஞருமான ஹெபா அபு நாடா (Heba Abu Nada) கொல்லப்பட்டார். பாலஸ்தீன கலாச்சார அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டது.
கொல்லப்படுவதற்கு முந்தைய நாள் (அக்டோபர் 19) ஹெபா அபு நாடா எழுதிய கவிதை
என் நண்பர்களின் பட்டியல்
சுருங்கி வருகிறது
நண்பர்கள்
சின்னச் சின்ன
சவப்பெட்டிகளாகிக் கொண்டிருக்கிறார்கள்
ஏவுகணைகளைவிட
வேகமாகப் பறந்திறக்கிற அவர்களை
என்னால்
மீட்க முடியவில்லை
காக்க முடியவில்லை
எனக்கு அழ முடியவில்லை
எனக்கு
என்ன செய்வதென்றும் தெரியவில்லை
ஒவ்வொரு நாளும்
என் நண்பர்களின் பட்டியல்
சுருங்கி வருகிறது
இது வெறும் பெயர்கள் அல்ல
வேறு பெயர்களிலும் முகங்களிலும் இருந்த
அவர்களும் நானே
நானும் அவர்களே
அல்லாவே
மாபெரும் இச் “சா” விருந்தில்
நான் என்ன செய்யமுடியும்
எந்தக் கொம்பனாலும்
கனவிலுங் கூட
என் நண்பர்களை மீட்டுத் தரமுடியாது.
– ஹெபா அபு நாடா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube