கூடப்படிக்கும் நண்பன் கேட்டது நீ எப்பொழுது உன் வீட்டிற்குக் கூட்டிச் செல்வாய்…

நான் எப்படிப் புரியவைப்பேன்…

அது வீடல்ல முழுசாக கட்டி முடிக்கப்படாத குருவிக் கூடு என்று…

அது வீடல்ல முழுசாக கட்டி முடிக்கப்படாத குருவிக் கூடு என்று‌‌‌…

குனிந்துகூடச் செல்ல முடியாத குட்டிஜப்பான் என்
வீடு…

தவழ்ந்துதான் செல்லமுடியும் அந்த தாஜ்மஹாலின் உள்ளே…

நம்ம ஊரு ரோடு போல வீட்டின் உள்ளே ஆங்காங்கே பள்ளங்கள்…

பள்ளங்களைப் பார்வையிடும் அதிகாரிகள் போல எலிகளும் மூட்டைப் பூச்சிகளும்…

எனக்கு மட்டுமே கிடைத்த வரம் வீட்டினுள் அருவி… கரையான் கடித்த கழிகள்…

கூரையின் மேல் பறவையின் எச்சங்கள்…

இரவில் ரோந்து வரும் போலீசு போல…

வீட்டிற்கு ரோந்து வரும் வௌவால்கள்…

ஆம்புலன்ஸ் சத்தம் எழுப்பி அலற வைக்கும் ஆந்தைகள்…

அடுப்பில் பூனை உறங்கும்…

கயிற்றில் தூணி தொங்கும்…

சாக்குப்பையில் தைத்த தலையணை ஓரம்‌‌‌ சினத்துடன் தூங்கும் தேள்கள்…

தினம் ஓர் தாலாட்டுப்பாடி தூக்கத்திலிருந்து எழுப்பும் கருவண்டுகள்…

நித்தமும் இவர்கள் தரும் சத்தத்தோடு யுத்தம்…

ஆஸ்பத்திரி அழைத்துச் செல்லத்துடிக்கும் கொசுக்கள்…

எத்தனைப் பேர் வாழும் என் வீட்டிற்கு உன்னை எப்படி நண்பா கூட்டிச்செல்வது…


இந்திரஜித்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க