பிரதமர் நரேந்திர மோடி கடந்த 05-08-2020 அன்று அயோத்தியில் இராமன் கோவிலுக்கு பூமி பூஜை செய்து வைத்தார். பாபர் மசூதி இருந்த இடத்தில், இந்திய அரசியல் சாசனத்தை அவமதிக்கும் அவமானச் சின்னமாக ராமர் கோவில் கட்டப்பட இருக்கிறது. 1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சூழலை தனது புகைப்படங்களில் பதிவு செய்திருக்கிறார், தற்போது பிரிண்ட் இணையதளத்தின் தேசிய புகைப்பட ஆசிரியராக இருக்கும் பிரவீன் ஜெயின் என்பவர்.
பாபர் மசூதி இடிப்பு ‘பக்தர்களின்’ ஆவேசத்தால் நடந்தது அல்ல; அது திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட சதி என்பதற்கு இந்தப் புகைப்படங்களை விட வேறு என்ன ஆதாரம் தேவை ?
***
ஜூலை 1992-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் கல்யாண் சிங் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் “சிங்துவார்” எனப்படும் முதன்மை நுழைவாயிலுக்காக திட்டமிடப்பட்ட இடத்தில் அடிக்கல் நாட்டும் விழாவிற்காக கூடியிருந்த கர சேவகர்கள்.
ஜூலை 1992-ம் ஆண்டு அந்த நிலத்தை சீரமைத்து தயாரித்துக் கொண்டிருந்த போது மனித எலும்புகள் கிடைத்தன. வருவாய்துறை ஆவணப் பதிவேடுகளில் அந்த இடம் முசுலீம்களின் இடுகாடு என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
அன்றைய மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் 03, டிசம்பர் 1992 அன்று புது டெல்லியிலிருந்து லக்னோவுக்குக் கிளம்புகையில் ரயில் நிலையத்தில் இருந்து அன்றைய பிரதமர் நரசிம்மராவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அயோத்தியின் நிலைமைகளைக் கண்காணிக்க அங்கு சென்றார்.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் டிசம்பர் 5. 1992 அன்று ஒரு கர சேவகர், “நாங்கள் ரத்தத்தைக் கொடுப்போம். நாங்கள் உயிரையும் கொடுப்போம்” என்று ஒரு சுவற்றில் எழுதிக் கொண்டிருக்கிறார்.
ராம ஜென்மபூமி இயக்கத்தோடு ஒருங்கிணைந்த பாபர் மசூதி இடிப்புக்கு ஒரு நாள் முந்தைய ஒத்திகைக்கு மத்தியில், ஒரு உத்தரப் பிரதேச போலீசுக்காரர் கரசேவகர்களுடன் இணைந்து “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிடுகிறார்.
டிசம்பர் 5, 1992 அன்று சம்மட்டிகளோடும் கடப்பாரைகளோடும் வரிசையில் நிற்கும் கரசேவகர்கள்.
முகமூடி அணிந்த ஒரு நபர், ஒத்திகையின் போது கரசேவகர்களுக்கு வழிகாட்டுதல் கொடுக்கிறார்.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவு.
உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட குறியீட்டுக் கரசேவைக்காக, டிசம்பர் 6, 1992 அன்று சரயு நதியில் இருந்து நீரும், மணலும் எடுத்து வரும் கர சேவகர்கள்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளன்று காலையில், பாஜக தலைவர் எல்.கே. அத்வானி ராம ஜென்மபூமி இயக்கத்தின் தலைவர்களை சந்திக்கிறார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது பல்வேறு பாஜக தலைவர்கள் அந்த இடத்தில் இருந்தனர். இடமிருந்து வலமாக, அன்றைய பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி, எல்.கே அத்வானி மற்றும் விஜயராஜே சிந்தியா ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர்
ராம் கதா கஞ்ச் எனுமிடத்தில், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் (நின்று கொண்டிருப்பவர்), உமா பாரதி (சிங்காலுக்கு வலப்புறம் நிற்பவர்) ஆகியோர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர்.
பாபர் மசூதியை இடிக்கும் கர சேவகர்கள்.
புது டெல்லியில் அத்வானி கைது செய்யப்பட்ட போது எடுத்த படம். அவருக்கு வலப்புறம் அவரது மனைவி கம்லா அத்வானி இருக்கிறார். முன்னால் நிற்பது இன்றைய பிரதம மந்திரி நரேந்திர மோடி
படம் : பிரவீன் ஜெயின் (தேசிய புகைப்பட ஆசிரியர், தி பிரிண்ட் இணையதளம்)
தமிழாக்கம் : நந்தன்
நன்றி : தி பிரிண்ட்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube