வேளச்சேரியில் பள்ளத்திற்குள் விழுந்த தொழிலாளர்களைத் தவிக்கவிடும் திமுக அரசு!

டந்த டிசம்பர் 4-ஆம் தேதி மிக்ஜாம் புயல் வீசிய அன்று சென்னை வேளச்சேரியில் அடுக்குமாடி கட்டடம் கட்ட தோண்டியிருந்த பள்ளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பல தொழிலாளர்கள் பள்ளத்திற்குள் விழுந்தனர். இரண்டு தொழிலாளர்கள் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் விபத்து ஏற்பட்டு நான்கு நாட்களாகியும் இப்போது வரை மீதமுள்ளவர்கள் மீட்கப்படவில்லை.

உள்ளே விழுந்தவர்களில் பெரும்பாலானார் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள். பலர் வடமாநில தொழிலாளர்கள். நான்கு நாட்களாக புயலையும் பொருட்படுத்தாமல் அத்தொழிலாளர்களின் மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் விபத்து ஏற்பட்ட பகுதியிலேயே காத்துக்கிடக்கின்றனர்.

“உள்ளே விழுந்தது அமைச்சரின் மகனாக இருந்தால் இந்நேரம் மீட்டிருப்பார்கள்.. குறைந்தபட்சம் உள்ளே விழுந்தவர்களின் உடல்களையாவது மீட்டு கொடுங்கள், முகத்தை பார்த்துவிட்டு சென்றுவிடுகிறோம்” என்று கதறும் உறவினர்களின் வார்த்தைகள் நம் மனசாட்சியை கேள்விக்கு உட்படுத்தகின்றன.

ஆனால், தற்போது வரை உள்ளே விழுந்தது எத்தனை பேர் என்ற விவரத்தை கூட தெரிவிக்காமல், முழுவீச்சில் மீட்புபணியை மேற்கொள்ளாமல், “தொழிலாளர்களை அப்போது மீட்போம், இப்போது மீட்போம்” என நான்கு நாட்களாக அலட்சியம் காட்டி வருகிறது தி.மு.க. அரசு. நமீதா, ரஜினி, அமீர் கான், மன்சூர்அலி கான் வீடுகளை வட்டமிடும் அற உணர்ச்சி அற்ற ஊடகங்களுக்கு இந்த விஷயத்தை மக்களிடம் கொண்டு செல்ல நேரமில்லை. நடிகர்களை மீட்க மட்டும் மாநகராட்சி பணியாளர்களை அனுப்பி வைக்கும் சென்னை மாநகராட்சியோ அடித்தட்டு மக்களை மீட்காமல் வஞ்சித்து வருகிறது.


வினவு களசெய்தியாளர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க