திருவான்மியூர் சிக்னல் ஜங்கசன் அருகே ஆதரவற்று இறந்து கிடந்த பெண்!

சென்னை திருவான்மியூர் சிக்னல் ஜங்கசன் அருகே உள்ள ஜெயந்தி பேருந்து நிலையம் அருகில் 50 முதல் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்துள்ளார். நம் தோழர்கள் இதை கவனித்து அருகில் இருந்த போக்குவரத்து போலீஸ் மூலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

நேற்று (டிசம்பர் 6) காலை வேளச்சேரி பகுதிக்கு மீட்பு பணிக்காக சென்ற நம் தோழர்கள் அந்த முதியவர் சாலை ஓரத்தில் படுத்துக்கிடந்ததை கவனித்துள்ளனர். இரவு அதே வழியாக திரும்பிவந்தபோது, அந்த முதியவர் அதே இடத்தில் படுத்துக்கிடந்ததை கவனித்து அருகில் சென்று பார்த்தபோது, கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக அவர் அந்த இடத்தில் கேட்பாரற்று இறந்து கிடந்தது தெரியவந்தது.


வினவு களச்செய்தியளார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க