02.01.2024
பெருமழை துயரம்: பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களின்
உடனடி கோரிக்கையை தமிழக அரசே நிறைவேற்று!
பத்திரிகை செய்தி
2023 டிசம்பர் 18ஆம் தேதி தென்காசி, நாகர்கோயில், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்து பெரும் அழிவை ஏற்படுத்தியது .
இது தொடர்பாக மக்கள் அதிகாரம் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் தோழர் ரவி உள்ளிட்டோர் ஆய்வுகளை மேற்கொண்டனர். அதிலிருந்து கீழ்க்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசுக்கு முன்வைக்கிறோம்.
இதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமான தூத்துக்குடியில் மழையின் பாதிப்பு இன்று வரை நீடிக்கிறது. மக்கள் பல வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மிகவும் முக்கியமான உடனடியாக தீர்க்க வேண்டிய இரண்டு பிரச்சனைகள் உள்ளன.
- தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் உடுத்த துணி கூட இல்லாமல் நடுத்தெருவில் நிற்கின்றனர். இதனை தீர்ப்பதற்கு அரசு ஊர்தோறும் முகாம் அமைத்து உணவு, உடை, தங்குமிடம் ஆகியவற்றை உடனடியாக ஏற்பாடு செய்வதை உத்திரவாதப்படுத்த வேண்டும்.
- தூத்துக்குடியை ஒட்டிய புறநகர் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மழை ஓய்ந்து 15 நாட்கள் ஆகியும் இன்று வரை மழை நீர் வடியவில்லை. ஒரு சில இடங்களைத் தவிர 90% இடங்களில் இதை அரசு கண்டு கொள்ளவே இல்லை . மழைநீர் தேங்கி சாக்கடை கழிவு நீருடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.இதன் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.பாதிக்கப்பட்ட மக்கள் வீட்டில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு தற்காலிக முகாம்களை அமைத்து உணவு, உடை, தங்குமிடம் ஆகியவற்றை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.அனைத்து இடங்களிலும் தேங்கியுள்ள மழை நீர் மற்றும் கழிவு நீர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது .
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube