போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக தற்போது, வேலை நிறுத்ததை அறிவித்ததையடுத்து, அரசுடன் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததுள்ளது. 2 கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்ற அரசு உத்தரவாதம் கொடுப்பதாகவும் மற்ற கோரிக்கைகளை பொங்கல் முடிந்த பிறகு முடிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அரசின் வாக்குறுதியை ஏற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்து போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் திட்டமிட்டப்படி 09.01.2024 முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் கோரிக்கைகளை பேசுவதற்கு எப்போது வேண்டுமானாலும் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்களின் முக்கியமான கோரிக்கைகள்:

  • 20,000 காலிப்பணியிடங்கள், சுமார் 8 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன, உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும்.
  • 8000 பேருக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்.
  • ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ரூபாய் 13,000 கோடி ரூபாயை போக்குவரத்து துறை செலவு செய்து விட்டது அதை உடனடியாக வழங்க வேண்டும்.
  • அகவிலைப்படி, ஊதிய உயர்வு, மருத்துவ காப்பீடு போன்றவற்றை வழங்க வேண்டும்.
  • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
  • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அதிமுக, திமுக ஆட்சிகளில் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகள் முடியும் சூழலில் அவர்களின் கோரிக்கைகளை கைவிட்டு விட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஏர்போர்ட், சிப்காட் அமைப்பதற்கும் உலக முதலீட்டாளர்களை ஈரக்கும் வேலையில் தீவிரமாக உள்ளது திமுக அரசு.

இந்நிலையில் தான், மக்களுக்கு தங்களின் கோரிக்கைகளை கொண்டு செல்லவும், போக்குவரத்து துறையை பாதுகாக்கவும் 9.01.2024 முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன தொழிற்சங்கங்கள்.

***

இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை கடன் வலையில் சிக்க வைத்து அம்பானி அதானிக்கும் விற்று கொண்டிருக்கிறது ஒன்றிய மோடி அரசு. அதேவேலையில், தமிழகத்தில் மக்கள் சேவையில் உள்ள (போக்குவரத்து, மின்சாரம், கல்வி) நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்க ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு. கார்ப்பரேட் முதலைகளுக்காக சிப்காட்டை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தையும் போட்டது குறிப்பிடத்தக்கது.

கார்ப்பரேட் சேவையில் ஒன்றிய மோடி அரசும், மாநில திமுக அரசும் எவ்வித வேறுபாடும் இன்றி தொடர்ந்து கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு சேவையை செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன. இதை வெறும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டமாக மட்டும் பார்க்க முடியாது. இது தனியார்மய கொள்கையை எதிர்த்து நடக்கின்ற போராட்டம்.

போக்குவரத்து துறை மட்டுமல்ல நாளை பள்ளி, கல்லூரி, மருத்துவம் என‌ அனைத்து துறைகளையும் தனியார் கையில் ஒப்படைப்பதும் நடக்கும். எனவே தனியார்மய கொள்கையை எதிர்த்து நடக்கும் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்தை அனைத்து உழைக்கும் மக்களும் ஆதரித்தாக வேண்டும்.

மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
948890 02202

நன்றி: மக்கள் அதிகாரம் – கோவை

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க