மத்திய பிரதேசம்: சிலுவையில் காவிக் கொடி ஏற்றிய காவி பயங்கரவாதிகள்

காவிக் கொடியை ஏற்ற அனுமதிக்காவிட்டால் மதமாற்றம் செய்ய முயன்றதாகக் கூறி பொய் வழக்கு பதிவுசெய்ய வைத்து அரசு சலுகைகள் அனைத்தையும் பறித்து விடுவோம் என்று காவி பயங்கரவாதிகள் பாதிரியார்களை அச்சுறுத்தியுள்ளனர்.

த்திய பிரதேச மாநிலத்தின் ஜபுவா மாவட்டத்தில் நான்கு தேவாலயங்களில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கமிட்டு வந்த வானரப்படை காவிக்கொடியை ஏற்றியுள்ளது. தேவாலயத்தின் மீதிருந்த சிலுவையில் காவிக் கொடியை காவிக்கும்பல் ஏற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த காவிக்கொடியில் அயோத்தி ராமன் கோவிலின் படமும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷமும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் ஜனவரி 21-ஆம் தேதி ராமன் கோவில் திறப்பிற்கு ஒரு நாள் முன்னர் நடந்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய அந்த தேவாலயத்தின் பாதிரியார் நர்பு அமலியார், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) தொழுகை முடிந்தவுடன் அந்த கும்பல் கோஷங்களை எழுப்பியபடி வந்ததாக கூறுகிறார்.

“நாங்கள் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையை முடித்திருந்தபோது, மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் அரங்கேறியது. ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூச்சலிட்டபடி எங்கிருந்தோ அவர்கள் வந்தனர். குறைந்தது 25 பேர் இருந்தனர். அவர்களில் சிலர் கொடியுடன் தேவாலயத்தின் மேல் ஏறினர்” என்று பாதிரியார் கூறினார்.

அவர்கள் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை அடையாளம் கண்டுகொண்டதாகப் பாதிரியார் கூறுகிறார்.

“நான் அவர்களை அடையாளம் கண்டுகொண்டேன். அவர்களில் சிலரின் பெயர்களும் எனக்குத் தெரியும். இது சரியல்ல என்று அவர்களிடம் சொல்ல முயன்றேன். நாங்கள் இங்கு வழிபாடு செய்கிறோம், எங்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று நான் அவர்களிடம் சொன்னேன். ஆனால் அவர்கள் கேட்க மறுத்துவிட்டார்கள். என்ன நடக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை, இதற்கு முன் இதுபோல நடந்ததில்லை” என்றும் அவர் கூறுகிறார்.


படிக்க: என்னை போன்ற முஸ்லிம்களுக்கு ராமன் கோவில் சொல்லும் செய்தி! | ஸியாவுஸ் சலாம்


காவிக் கொடியை ஏற்ற அனுமதிக்காவிட்டால் மதமாற்றம் செய்ய முயன்றதாகக் கூறி பொய் வழக்கு பதிவுசெய்ய வைத்து அரசு சலுகைகள் அனைத்தையும் பறித்து விடுவோம் என்று காவி பயங்கரவாதிகள் பாதிரியார்களை அச்சுறுத்தியுள்ளனர்.

பாதிரியார் ஒருவர் மட்டும் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இது ஒரு தேவாலயம் இல்லை, வீடுதான் என வழக்கு பதிவு செய்யாமல் இருந்ததற்கு போலீஸ் காரணம் கூறுகிறது.

ஆனால் இதை அந்த பாதிரியார் மறுத்துள்ளார்.  “இது 2016-ஆம் ஆண்டில் நான் தொடங்கிய தேவாலயம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், 30-40 பேர் பிரார்த்தனைக்காக இங்கு வருகிறார்கள். இது ஒரு வழிபாட்டுத்தலம். என் வீடு தனியாகத்தான் உள்ளது” என்றார். இருப்பினும், அவர் இதுவரை புகார் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ராமன் கோவில் திறப்பு என்ற பெயரில் நாடுமுழுவதும் காவிக்கும்பல் வெறியாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. அரசு இயந்திரத்தின் உதவியுடன் சிறுபான்மை மக்களுக்கு எதிரான மதவெறியாட்டங்களை காவி பயங்கரவாதிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.


ரித்திக்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க