தமிழகம் தழுவிய அரசு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் போராட்டம்!

மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பின் கீழ் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி போராட்டத்தை நடத்தினர். கோரிக்களை நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் (பிப்ரவரி 15) மீண்டும் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்களை தொடர்ந்து தமிழகம் தழுவிய
அரசு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் போராட்டம்!

2003 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை (20 ஆண்டுகள்) அரசு பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் ஆகிய அரசு ஊழியரகள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அரசு அவர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. அவர்களின் ஊதியங்களை அரசு முறையாக நிர்ணயம் செய்வதில்லை. இதனால் அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று (30.01.2024) தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் அங்கமாக கோவையிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பின் கீழ் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி போராட்டத்தை நடத்தினர். கோரிக்களை நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் (பிப்ரவரி 15) மீண்டும் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.

கோரிக்கைகள்:

  1. சிபிஎஸ் திட்டத்தை முழுமையாக ரத்து செய்து உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
  2. ஊதிய முரண்பாட்டால் பெரும் பிரச்சனையை கண்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற் கல்வி இயக்குனர், மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாடுகள் அனைத்தையும் களைதல் வேண்டும்
  3. முடக்கப்பட்ட DA, EL (Earned Leave) சரண்டர், உயர்கல்விக்கான ஊக்கிய ஊதியம் ஆகியவற்றை உடனடியாக வழங்குதல் வேண்டும்
  4. தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சத்துணவு ஊழியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் MRB செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், மற்றும் ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
  5. சாலைப் பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்
  6. உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் அவுட்சோர்சிங் நியமன முறைகளை முற்றிலுமாக அரசு கைவிட வேண்டும்
  7. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பணிபுரியும் பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்
  8. ஏழாவது ஊதிய குழுவின் 21 மாத கால நிலுவைத் தொகை வழங்க வேண்டும்
  9. 2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் பணி காலத்தினை பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்த வேண்டும்
  10. காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை உடனடியாக வழங்கிட வேண்டும்


தகவல்
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube