ரஃபா நகரின் மீதான தாக்குதல்: இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்

பாசிச யூத இனவெறி இஸ்ரேல் அரசு காசா பகுதியில் தனது இனப்படுகொலை நடவடிக்கையைத் தொடங்கிய போது பாலஸ்தீன மக்களை தெற்கு காசாவில் அமைந்துள்ள ரஃபா நகரிற்குச் செல்லுமாறு அச்சுறுத்தியது. தற்போது ராபா நகரில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு மக்கள் நெருக்கமாக அடைக்கப்பட்டுள்ள ரஃபா நகரில் இஸ்ரேலிய இராணுவம் நேற்று (பிப்ரவரி 9) குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையாக இஸ்ரேலை விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இஸ்ரேல் ராணுவம் தனது தரைப்படை தாக்குதலை ரஃபா நகருக்குள் விரிவுபடுத்த உள்ளதாக செய்திகளும் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் தனது இனப்படுகொலையைத் தொடங்கி ஐந்து மாதங்களைக் கடந்துள்ள நிலையில், இதுவரை கிட்டத்தட்ட 28,000 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது ரஃபாவிற்கு வடக்கே உள்ள கான் யூனிஸ் நகரில் குவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய தரைப்படைகள் ரஃபா நகருக்குள் நுழையுமானால் இலட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவர்.

ரஃபா நகரில் இஸ்ரேலிய இராணுவம் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துரைக்கும் வகையிலான புகைப்படங்களின் தொகுப்பு:

நன்றி: முகம்மது அபெத் [Mohammed Abed/AFP]

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க