கிரீஸ் விவசாயிகள் போராட்டம் | புகைப்படங்கள்

விவசாயத்தை மேற்கொள்வதற்கான செலவுகள் பலமடங்கு அதிகரித்து விட்டது; ஆனால் விவசாயிகளைக் காப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

0

பிப்ரவரி 20 அன்று கிரீஸ் தலைநகர் ஏதென்சில் சுமார் 8 ஆயிரம் விவசாயிகள் நாடாளுமன்றத்துக்கு முன்பாகக் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் கிரீஸ் பாராளுமன்றத்தை அலங்கரித்தன. போராடிய விவசாயிகள் ”விவசாயிகள் இல்லாவிட்டால் உணவே கிடையாது” என்று முழக்கங்களை எழுப்பினர்.

தற்போது இந்தியாவில் நடந்துவருவதைப் போல் ஐரோப்பிய நாடுகளிலும் விவசாயிகள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின், கிரீஸ், நெதர்லாந்து, போலந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் ஆங்காங்கு விவசாயிகள் போராடி வருகின்றனர்.

விவசாயத்தை மேற்கொள்வதற்கான செலவுகள் பலமடங்கு அதிகரித்து விட்டது; ஆனால் விவசாயிகளைக் காப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அரசு தலையிட்டு நிலைமையை சரி செய்ய வேண்டும் என்பது தான் விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடுகள் 60 சதவிகிதத்திற்கும் மேல் குறைந்துவிட்டது என்றும், அவர்களின் வருவாயானது இதுவரை இல்லாத அளவிற்கு சரிந்து விட்டது என்றும் கிரீஸ் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

விவசாயத்திற்கு வரியில்லா எரிபொருள், கடன் தள்ளுபடி, வெளிநாட்டுப் போட்டியை கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகள், இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதங்களுக்கு விரைவான இழப்பீடு வழங்குவது ஆகிய கோரிக்கைகளையும் விவசாயிகள் முன்வைத்தனர்.

டிராக்டர் பேரணி நடந்து முடிந்த பின்னர் சில விவசாயிகள் இரவு முழுவதும் நாடாளுமன்றத்திற்கு வெளியே தங்கிவிட்டு அடுத்த நாளன்று (பிப்ரவரி 21) தங்கள் டிராக்டர்களுடன் வெளியேறினர்.

தீரமிகு கிரீஸ் விவசாயிகளின் போராட்டத்தின் புகைப்படங்களை வாசகர்களுக்குத் தொகுத்து வழங்குகிறோம்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க