பகத்சிங் சுகதேவ் ராஜகுரு தியாகத்தை நெஞ்சிலேந்துவோம் | தெருமுனை பிரச்சாரம் | ஆலை வாயில் கூட்டம் | சென்னை

பகத்சிங் சுகதேவ் ராஜகுரு தியாகத்தை நெஞ்சிலேந்துவோம்
| தெருமுனை பிரச்சாரம் | சென்னை

23.03.2024,
சைதாப்பேட்டை,
சென்னை.

இணைப்பு 1

இணைப்பு 2

***

பகத்சிங் சுகதேவ் ராஜகுரு தியாகத்தை நெஞ்சிலேந்துவோம்
| ஆலை வாயில் கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பு சங்கமான டி . ஐ. மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக மார்ச் 23 , ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான தோழர்.பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தோழர்களின் நினைவு நாள் ஆலை வாயில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் மு. சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில் பகத்சிங் உள்ளிட்ட தோழர்களை நாம் ஏன் உயர்த்திப் பிடிக்க வேண்டும். இளம் வயதில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், உழைப்பு சுரண்டலுக்கு எதிராகவும் தன்னுடைய உயிரை துட்சமென கருதி இந்த சமூகம் விடுதலை பெற வேண்டுமானால் அதற்கு மாற்று சோசலிசமே என்று போராடி தூக்கு மேடை ஏறினார்.

நாம் அந்த தியாகத்தை உயர்த்தி படிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.

அதைத் தொடர்ந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் ப.சக்திவேல் அவர்கள் சிறப்புரையாற்றினார். இவர் தனது சிறப்புரையில் இந்த நாடாளுமன்ற ஜனநாயக கட்டமைப்பில் நிறைவேற்றப்படும் திட்டங்களும் சட்டங்களும் பாட்டாளி வர்க்கத்தை மேலும் அடிமைப்படுத்துகிறது. உழைப்பை சுரண்டுகிறது, நாட்டை சூரையாடுகிறது . இதற்கு மாற்று கட்சிகளோ அல்ல, இந்த நாட்டினுடைய செயல்பாடுகள் உள்ளிட்ட தனிமனித செயல்பாடுகள் வரை அனைத்தையும் தீர்மானிக்கின்ற சக்தியாக கார்ப்பரேட் முதலாளிகள் இருக்கின்றனர். அந்த முதலாளித்துவம் தான் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையையும் நாட்டையும் சூறையாடுகிறது . அதற்கு சேவை செய்கின்ற ஆளும் வர்க்கமும் பாஜக போன்ற பாசிச கட்சிகளும் துணையாக இருக்கின்றது. ஆகவே காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவதற்கு தோழர்கள் காட்டிய வழியில் பயணிப்போம். மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம். பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை நிறுவுவதற்கு போராடுவோம் வாருங்கள் தோழர்களே! என்று தனது உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் க.செல்வன் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

கூட்டத்தின் தொடக்கத்தில் முழக்கம் இடப்பட்டது. கூட்டத்தில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்
டி . ஐ. மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கம்
இணைப்பு:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்பு குழு,
தமிழ்நாடு.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க