அல்-குத்ஸ் தினத்தன்று நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணிகள்
அல்-குத்ஸ் தினம் பாலஸ்தீனத்திற்கான ஆதரவையும், தற்போதைய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் ஒரு சர்வதேச தினமாகும். ஈரான், மலேசியா, இந்தோனேசியா, ஈராக் மற்றும் லெபனான் போன்ற நாடுகளில் உள்ள மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒன்று கூடினர்.
அல்-குத்ஸ் தினமான இன்று (05-04-2024) உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு வரும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தினர்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் ரம்ஜான் மாதத்தின் கடைசி வெள்ளியன்று உலக அளவில் கடைபிடிக்கப்படும் ஒற்றுமை நாள் தான் அல்-குத்ஸ் தினம்.
அல்-குத்ஸ் தினம் பாலஸ்தீனத்திற்கான ஆதரவையும், தற்போதைய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் ஒரு சர்வதேச தினமாகும். ஈரான், மலேசியா, இந்தோனேசியா, ஈராக் மற்றும் லெபனான் போன்ற நாடுகளில் உள்ள மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒன்று கூடினர்.
வெள்ளிக்கிழமையான இன்று தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற பேரணிகளில் பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் பதாகைகளுடன் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
பலர் தங்கள் கைகளில் “இஸ்ரேல் ஒழிக” என்று எழுதப்பட்ட பதாகைகளை வைத்திருந்தனர். மற்றவர்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கொடிகளை தீயிட்டு எரித்தனர்.