வாசக நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

மீண்டும் FINAL COUNTDOWN செய்தி அறை!

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, வினவு மற்றும் புதிய ஜனநாயகம் சார்பாக “THE FINAL COUNTDOWN” என்ற செய்தி அறை (Newsroom)அமைக்கப்பட்டது. முதல்கட்டமாக, ஏப்ரல் 15 முதல் 19 வரை ஐந்து நாட்கள் தமிழ்நாடு முழுவதுமிருந்து பல தோழர்கள் இணைந்து பா.ஜ.க-வை வீழ்த்துவது குறித்த கண்ணோட்டத்தை உருவாக்கும் வகையிலான கட்டுரைகள், காணொளிகள், சமூக வலைதள பதிவுகளை கொண்டுவந்து இம்முன்னெடுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தோம்.

தற்போது தேர்தல் முடிவுகளையொட்டி “FINAL COUNTDOWN” செய்தி அறையின் இரண்டாவது கட்டம் தொடங்கப்போகிறது. மே 29 முதல் ஜுன் 4 வரை, ஏழு நாட்களுக்கு நடைபெறப்போகும் இந்த செய்தி அறையில், ஏழு கட்டமாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி-அமித்ஷா கும்பல் செய்த மோசடிகள்; களத்தில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள்; ஜுன் 4 தேர்தல் முடிவுகள் குறித்து தொடர்ச்சியாக கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் கொண்டு வரப்படும். கடந்த முறை போன்று, தற்போதும் வாசகர்கள் அனைவரும் இந்த செய்தி அறைக்கு ஆதரவளிக்க வேண்டும்.

இந்த செய்தி அறையில், பி.ஜே.பி. கும்பலை வீழ்த்த வேண்டும், மக்களுக்கான ஜனநாயகத்தை பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் சமூக ஊடகங்களில் (Video-Audio Editing, Digital content creation, Translation) ஊக்கமாக வினையாற்றி வருபவர்கள் (அ) வினையாற்ற வேண்டும் என்று விரும்புபவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு இணைந்து கொள்ளலாம்.

தொடர்புக்கு: 93846 59191, 94446 32561

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க