பாசிச மோடி அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான
வழக்கறிஞர் போராட்டம் வெல்லட்டும்!

வழக்கறிஞர் போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் துணை நிற்கும்!
ஆதரவளிக்கும்!

01.07.2024

பத்திரிகை செய்தி

ன்று முதல் பாசிச மோடி அரசால் புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. நாட்டை இந்துராஷ்டிரமாக்குவதற்கு ஏற்றபடி தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள், பாசிச மோடி அரசுக்கு எதிராக செயல்படுபவரை ஒழித்துக் கட்டவும் அடிப்படை உரிமைகளைக்கூட இனி யாரும் பேச முடியாது என்ற நிலைக்குத் தள்ளவும் செய்கின்றன.

இதற்கு முன்பு சட்டங்களில் இருந்த இந்தியா என்ற பெயர், தற்போதைய புதிய சட்டங்கள் மூன்றிலும் பாரதிய என்ற மாற்றப்பட்டிருக்கிறது.

ஒரு நாட்டின் பெயரையே யாருக்கும் தெரியாமல் மாற்றி இருக்கிறது பாசிச மோடி அரசு.

ஒரு குற்றவாளியை கைவிலங்கிட்டு அழைத்து வருவது தவறு என்று சொல்கிறது பழைய சட்டம். புதிய சட்டமோ கை விலங்கிட்டு அழைத்து வருவது தவறல்ல என்று விளக்கம் கொடுக்கிறது.

கணவனாக இருந்தாலும் மனைவியின் அனுமதி இன்றி உறவு கொள்வது தவறு என்றும் அது தண்டனைக்குரிய குற்றம் என்றும் உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள நீதிமன்றங்கள் தெரிவித்து இருக்கின்றன. இந்திய நீதிமன்றங்களும் இக்கருத்தை தெரிவித்திருந்த நிலையில் தான், மனைவியின் அனுமதியின்றி உடலுறவு கொள்வது “ரேப்” என்ற குற்றமாகாது என்று விதிவிலக்கு செய்திருக்கிறது புதிய சட்ட திருத்தம்.

மாநில அரசு முடிவு செய்தால், ஒரு மாவட்டக் கண்காணிப்பாளரையே சிறப்பு நிர்வாக நடுவராக நியமிக்க முடியும். இதன்படி போலீசால் பாதிக்கப்படும் எந்த ஒரு நபருக்கும் போலீஸ் உயரதிகாரியே நீதி வழங்குவார் என்று நம்பச் சொல்கிறது.


படிக்க: “உயர்நீதிமன்றத்தில் தமிழ்” – உழைக்கும் மக்களே! வழக்குரைஞர் போராட்டத்திற்கு துணைநிற்போம்!


இந்த மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டு வெளிநாட்டு வழக்குரைஞர்களை இந்திய நீதிமன்றங்களில் வாதாடுவதற்கு உரிமை பெற்றுக் கொடுத்த இந்த பார் கவுன்சில், உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞர்களை மறைமுகமாக மிரட்டுகிறது.

ஏற்கெனவே குற்றவியல் சட்டங்களில் இருந்த காலனிய ஆதிக்க பிரிவுகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வழக்குரைஞர்கள் போராடி வந்த நிலையில் இப்போது பாசிச மோடி அரசு அதைவிட மிகக் கொடூரமான மூன்று சட்டங்களை இயற்றியுள்ளது.

இந்த மூன்று புதிய சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர் போராட்டங்களை மக்கள் அதிகாரம் ஆதரிப்பதுடன் தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் நடத்தும் போராட்டங்களிலும் மக்கள் அதிகாரம் கலந்து கொள்ளும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

பாசிச மோடி அரசின் புதிய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க