ஒலிம்பிக்கில் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம்!

சர்வதேச மல்யுத்த சம்மேளனம் – பாசிச மோடி கும்பலின் கூட்டுக் களவாணித்தனத்தைக் கண்டிப்போம்!

07.08.2024

நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது வினேஷ் போகத்தின் வெற்றிக்கு. நேற்றைய தினம், ஒரே நாளில் மூன்று போட்டிகளில் வென்று இறுதிப் போட்டிக்கு நுழைந்திருந்தார் அவர்.

வெள்ளியா, தங்கமா என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இன்று அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இன்று காலை 9 மணி அளவில் எடை பரிசோதனை செய்யும் போது 50 கிலோவை விட 100 கிராம் கூடுதலாக இருந்தார் என சொல்லி தகுதி நீக்கம் செய்துள்ளது சர்வதேச மல்யுத்த சம்மேளனம்.

கடந்த ஆண்டு, பாலியல் குற்றவாளியான பிஜேபியின் பிரிஜ் பூசன் சிங்குக்கு எதிரான போராட்டத்தில் களத்தில் நின்றார். அதன் பிறகு அவர் வெளிப்படுத்திய வார்த்தைகள் முக்கியமானது. நம் நாட்டில் நாளை மல்யுத்தம் விளையாட வரும் இளம் வீராங்கனைகளின் பாதுகாப்பிற்காக நான் சண்டை செய்கிறேன். சென்ற ஆண்டு ஜந்தர் மந்திரில் இருந்தேன். இப்போது இங்கு இருக்கிறேன்.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு கொண்டு பதக்கம் வாங்கி பிரிஜ் பூசன் சிங் போன்றவர்களின் கண்களுக்கு நேராக மெடலை காண்பிக்க வேண்டும் என சபதம் எடுத்தார். மேலும், இந்த ஒலிம்பிக் தான் அவரது கடைசி ஒலிம்பிக்.

பாலியல் குற்றக்கும்பலின் முகத்தில் கரியைப் பூசி, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே களத்திற்கு வந்தார். அதனால்தான் வினேஷ் போகத் போட்டிக்கு வந்தவுடன் அது பாலியல் பாஜக கும்பலுக்கு எதிரான போராட்டமாகப் பார்க்கப்பட்டது.

கடந்த ஏப்ரலில் கூட ஒலிம்பிக்கில் இடம் பெறுவதற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறார்கள், இந்திய மல்யுத்த சங்கம் என்ற பெயரில் உள்ள பிரிஜ் பூசன் சிங்கின் ஆதரவாளர்கள் என வெளிப்படையாகவே பேட்டி கொடுத்தார்.


படிக்க: மல்யுத்த வீரர்களின் எதிர் நடவடிக்கைகள் தங்களையே வருத்திக் கொள்வதாக இருப்பதை எப்படி பார்ப்பது?


இதையெல்லாம் பார்த்துத்தான் வினேஷ் போகத்தின் மீது ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பல் மிக வன்மமாகவும் வெறுப்படைந்தும் இருந்திருக்கிறது.

இந்நிலையில், போராட்டக் களத்தில் வினேசுக்குத் துணை நின்ற இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, எக்ஸ் தளத்தில் நேற்று போட்ட பதிவில், “வினேஷ் போகத் இன்று நடந்த போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று இந்தியாவின் சிங்கப் பெண்ணாக உருவெடுத்துள்ளார். 4 முறை உலகச் சாம்பியன், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனையும் தோற்கடித்துள்ளார். காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனையும் தோற்கடித்தார். ஆனால், ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தப் பெண் தன் சொந்த நாட்டிலேயே அடித்து உதைக்கப்பட்டு, தெருக்களில் தரத்தரவென இழுத்துச் செல்லப்பட்டார். இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்” என தனது பதிவில் கூறியிருந்தார்.

பாசிச மோடி கும்பலையும் பிரிஜ் பூசன்சிங் கும்பலையும் காறி உமிழ்ந்த இப்பதிவு, உலக அளவில் பேசுபொருளானது. இதையெல்லாம் கண்டு மீண்டும் வெறுப்படைந்துள்ளது ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பல்.

வினேஷ் போகத் எப்படியாவது விழுந்து விட வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பலின் எண்ணம். அதனால்தான் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் நடவடிக்கைகளுக்குப் பின் ஆர்எஸ்எஸ் – பிஜேபி பாசிச கும்பலின் கைகள் நீண்டிருக்கும்.என நாம் குற்றம் சாட்டுகிறோம்.

மோடி, இப்போது இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் பி.டி.உஷாவிடம் பேசுவதும், மேல்முறையீடு செய்யச் சொல்வதும் கூட கபட நாடகம் தான். மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் கும்பலுக்கு எதிராக போராடும் போது வேடிக்கை பார்த்தவரும், நடவடிக்கை எடுக்காதவருமான மோடி இப்போது நாடகமாடுவது அயோக்கியத்தனத்தின் உச்சம்.

இந்திய நாட்டு உழைக்கும் மக்களே, நமது ஆதரவை வினேஷ் போகத்திற்குத் தருவதோடு இந்த ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பலுக்கு எதிரான கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்தப் பாசிசக் கும்பலின் சித்தாந்தமே பெண்களுக்கு எதிரானது. பெண்களை வைத்து குத்துவிளக்குப் பூஜை நடத்தும் இந்த கும்பல்தான், மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் செய்த பிரிஜ் பூசன் சரண் சிங்கைப் பாதுகாத்தது. இன்று வரை மல்யுத்த வீராங்கனைகளுக்கு நெருக்கடிகள் கொடுத்து வெற்றி பெற விடாமல் தடுத்திருக்கிறது.

இதன் மூலம் ஆர்எஸ்எஸ் – பிஜேபி பாசிச கும்பல் மீண்டும் பாலியல் கிரிமினல்களின் வெற்றியை உறுதி செய்துள்ளது. குற்றக் கும்பல்களின் புகலிடமான ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி, ஏ.பி.வி.பி உள்ளிட்ட பாசிச சக்திகளை விரட்டியடிப்போம்! வினேஷ் போகத் உள்ளிட்ட வீராங்கனைகளுக்குத் துணை நிற்போம்!


மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
94448 36642

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க